காஷ்மீரில் மசூதிக்குள் புகுந்த பாகிஸ்தான் தீவிரவாதி
ஸ்ரீநகர்:
காஷ்மீர் மாநிலம் பத்காம் மாவட்டத்தில் உள்ள ஒரு மசூதியில் புகுந்து கொண்ட தீவிரவாதி ஒருவனைச் சரணடையச்செய்ய பாதுகாப்புப் படையினர் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
காஷ்மீர் மாநிலத்தில் நேற்று (சனிக்கிழமை) இரவு பாதுகாப்புப் படையினருக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையேகடும் துப்பாக்கிச் சூடு நடந்தது. அப்போது 3 தீவிரவாதிகள் பாதுகாப்புப் படையினரின் தாக்குதலில் இருந்துதப்பிக்க ஓடினார்கள். அவர்களில் 2 பேர் ஒரு வீட்டுக்குள் ஒளிந்துகொண்டனர். மற்நொருவர் அருகில் இருந்தமசூதிக்குள் புகுந்து கொண்டார்.
வீட்டில் ஒளிந்துகொண்டிருந்தவர்கள் மீது பாதுகாப்புப் படையினர் துப்பாக்கி சூடு நடத்தினார்கள். அவர்களும்பதிலுக்குத் திருப்பிச் சுட்டனர். இந்தச் சண்டையில் அவக்ள் 2 பேரும் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
மசூதிக்குள் ஒளிந்துகொண்டுள்ள தீவிரவாதியைச் சரணடையச் செய்ய பாதுகாப்புப் படையினர் தீவிர முயற்சிமேற்கொண்டு வருகின்றனர். அவன் வெளியில் தப்பிவிடாமல் இருக்க மசூதியின் அனைத்து வழிகளையும்பாதுகாப்புப் படையினர் அடைத்துவிட்டனர். மேலும் மசூதியைச் சுற்றி பலத்த பாதுகாப்புப் போடப்பட்டுள்ளது.
மேலும் அந்தப் பகுதியில் வேறு யாரும் தீவிரவாதிகள் பதுங்கியுள்ளனரா என்று காஷ்மீர் மாறில போலீசாரும்,பாதுகாப்புப் படையினரும் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
இதுகுறித்து காஷ்மீர் மாநில போலீஸ் ஐ.ஜி. அசோக் காந்த் கூறுகையில்,
மசூதிக்குள் ஒளிந்துகொண்டுள்ள தீவிரவாதி, எந்த தீவிரவாத அமைப்பைச் சேர்ந்தவன் என்று தெளிவாகத்தெரியவில்லை.
அவன் பாகிஸ்தான் ஆதரவுடன் செயல்பட்டுவரும் ஹிஸ்புல் முஜாஹிதீன் தீவிரவாத அமைப்பைச் சேர்ந்தவனாகஇருக்கலாம். மேலும் மாநிலம் முழுவதும் தீவிரவாதிகள் பதுங்கியுள்னரா என்று கண்டுபிடிக்க தீவிர தேடுதல்வேட்டை நடத்தப்பட்டு வருகிறது என்றார் அசோக் காந்த்.
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications