டான்சி: இன்றுடன் முடிகிறது அரசு வழக்கறிஞர் வாதம்
சென்னை:
டான்சி நில பேர ஊழல் வழக்கில் ஜெயலலிதா தாக்கல் செய்திருந்த மேல் மூறையீட்டு மனு மீதான விசாரணைஇன்று (திங்கள்கிழமை) மீண்டும் துவங்கியது. நீதிபதி தினகரின் கேள்விகளுக்கு அரசு சிறப்பு வழக்கறிஞர்வெங்கடபதி பதிலளித்தார்.
1991ம் ஆண்டு முதல் 1996ம் ஆண்டுவரை ஜெயலலிதா முதல்வராக பதவி வகித்த போது அரசுக்கு சொந்தமானடான்சிநிலத்தை வாங்கியதில் ஊழல் நடந்ததால் அரசுக்கு இழப்பு ஏற்படுத்தியதாக கூறி ஜெயலலிதா மீது கடந்ததிமுக அரசு வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கில் ஜெயலலிதாவுக்கு தனி நீதிமன்றம் 3 ஆண்டு காலம் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியது.இதனால் ஜெயலலிதாவால் கடந்த சட்டசபை தேர்தலில் போட்டியிட இயலாமல் போனது.
தனக்கு தனி நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை ரத்து செய்ய வேண்டும் என்று கூறி சென்னை உயர் நீதிமன்றத்தில்அப்பீல் மனு தாக்கல் செய்தார் ஜெயலலிதா.
அப்பீல் மனு மீதான விசாரணை நீதிபதி தினகர் முன்பு நடந்து வருகிறது. சரஸ்வதி பூஜை விடுமுறைக்கு பின்திங்கள்கிழமை விசாரணை மீண்டும் துவங்கியது. முன்னரே ஜெயலலிதா தரப்பின் வாதம் முடிந்துவிட்டது.
நீதிபதி எழுப்பிய கேள்விகளுக்கு அரசு சிறப்பு வழக்கறிஞர் வெங்கடபதி பதிலளித்தார். வெங்கடபதியின்வாதங்கள் இன்றுடன் முடிவடையும் என்று தெரிய வந்துள்ளது.
வெங்கடபதியின் வாதத்திற்கு பதிலளித்து ஜெயலலிதாவின் வக்கீல் வாதிடுவார். அவரின் வாதமும் புதன்கிழமைமுடிந்துவிடும் என்று கூறப்படுகிறது.
இன்னும் சில நாட்களில் இந்த விசாரணையின் மீதான தீர்ப்பு வழங்கப்படவுள்ளது. இந்த வழக்கு ஜெயலலிதாவின்அரசியல் வாழ்க்கையில் மிக முக்கியத்துவம் வாய்ந்ததால் நீதிபதியின் தீர்ப்பை நாடே ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளது.
-
எவ்வளவு வேகம்! சிட்டிக்கு நடுவே வளர்ந்து நிற்கும் ஸ்டீல் ராட்சசன்.. சென்னையின் காஸ்ட்லி ப்ராஜெக்ட் -
Gold price: மீண்டும் அதிரடியாக குறைந்த தங்கம் விலை.. நகை பிரியர்கள் ஹேப்பி.. ஒரு சவரன் ரேட் என்ன? -
கிளாம்பாக்கம் - மகேந்திரா வேர்ல்ட் சிட்டி.. சென்னையின் மிகப்பெரிய ப்ராஜெக்ட்.. எல்லாமே மாறப்போகுது -
Gold Price: ஒரே நாளில் 3,040 அதிகரிப்பு.. மீண்டும் உச்சம் தொடும் தங்கம் விலை.. அம்மாடியோவ்! நகை பிரியர்கள் ஷாக் -
Low Pressure: காற்றழுத்த தாழ்வு பாதையால் நடக்கும் மேஜிக்! தென் கடலோர மாவட்டங்களில் பிச்சு உதறப் போகுது மழை! -
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே












Click it and Unblock the Notifications