வாழப்பாடியை மீண்டும் காங்கிரசில் இணைக்க இளங்கோவன் முயற்சி
சென்னை:
வாழப்பாடி ராமமூர்த்தியை மீண்டும் காங்கிரசில் இணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார் தமிழக காங்கிரஸ் கட்சிதலைவர் இளங்கோவன்.
தமிழக காங்கிரசில் தனித்தனி கோஷ்டியாக இயங்கி வரும் முக்கிய தலைவர்கள் அனைவரையும் ஒருங்கிணைத்துகாங்கிரசுக்கு பலம் சேர்க்கும் பணியில் ஈடுபட்டுள்ளார் இளங்கோவன்.
இதுவரை தனித்தனி கோஷ்டியாக செயல்பட்டு வந்த திண்டிவனம் ராமூர்த்தி, தங்கபாலு, அருணாசலம், குமரிஅனந்தன் மற்றும் அன்பரசு ஆகியோரை ஒருங்கிணைத்து விட்டார் இளங்கோவன்.
இந்நிலையில் காங்கிரசிலிருந்து பிரிந்து தமிழக ராஜீவ் காங்கிரஸ் என்ற தனி கட்சியை நடத்தி வரும் வாழப்பாடிராமமூர்த்தியை மீண்டும் காங்கிரசில் இணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார் இளங்கோவன்.
சமீப காலமாக அதிமுக-காங்கிரஸ் உறவில் நட்புறவு நிலவவில்லை. நீண்ட காலத்திற்கு பின் மீண்டும்அதிமுகவுடனான நட்புறவை புதுப்பித்துக் கொண்டுள்ள வாழப்பாடி ராமமூர்த்தி தான் மீண்டும் காங்கிரசில்சேர்ந்தால் ஜெயலலிதாவின் கசப்புணர்ச்சிக்கு ஆளாக நேரிடுமோ என்ற பயத்திலும் இருக்கிறார்.
ஆனாலும் தான் காங்கிரசில் சேர்வதற்கு பல நிபந்தனைகளை விதித்துள்ளார் வாழப்பாடி ராமமூர்த்தி. அவரதுகோரிக்கைகளை காங்கிரஸ் மேலிடம் பரிசீலித்து வருகிறது.
மேலிடத்திலிருந்து வரும் பதிலுக்கு பின் வாழப்பாடி ராமமூர்த்தி மீண்டும் காங்கிரசில் இணையலாம் என்றுதெரியவந்துள்ளது.
-
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ்












Click it and Unblock the Notifications