சென்னையில் விஷ வாயு தாக்கி 3 பேர் சாவு
சென்னை:
சென்னையில் கழிவு நீர்த் தொட்டியைச் சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்த 3 பேர் விஷ வாயு தாக்கிபரிதாபமாக இறந்தனர்.
சென்னை ஆவடி அருகே கழிவு நீர் தொட்டியைச் சுத்தப்படுத்தும் பணியில் சிலர் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது தொட்டிக்குள் இருந்த ஒருவர் திடீரென்று மயங்கி தொட்டிக்குள்ளேயே விழுந்து விட்டார்.
இதைக் கண்ட வேறு இரண்டு பேர் அவரைக் காப்பாற்றுவதற்காக தொட்டிக்குள் இறங்கினர். ஆனாலும் அவர்களும்மயங்கி அதே தொட்டிக்குள் விழுந்து விட்டனர்.
இதையடுத்து அந்தத் தொட்டி அருகில் செல்ல அஞ்சிய மற்றவர்கள் போலீசுக்குத் தகவல் கொடுத்தனர்.
தீயணைப்புப் படையினருடன் விரைந்து வந்த போலீசார் தொட்டிக்குள் கிடந்தவர்களை மீட்ட போது, அவர்கள்மூவருமே இறந்து போனது தெரிய வந்தது.
தொட்டிக்குள் கசிந்த விஷ வாயுவை சுவாசித்ததால்தான் குமார், வெள்ளத்துரை மற்றும் செல்வம் ஆகிய இந்தமூன்று பேரும் இறந்து போனதாகக் கூறப்படுகிறது.
ஏழுகிணறில் விஷ வாயு தாக்கி 10 பேர் மயக்கம்
இந்நிலையில் சென்னை-ஏழுகிணறு பகுதியிலும் விஷ வாயு தாக்கி 10 பேர் மயக்கமடைந்தனர்.
சோடியம் ஹைட்ரஜன் சல்பேட் என்ற ரசாயனப் பொருள் இருந்த பாட்டில் உடைந்ததால் அதிலிருந்து வெளியேறியவாயுவை சுவாசித்த இந்த 10 பேரும் உடனே மயக்கமாகிவிட்டனர்.
இவர்கள் அனைவரும் சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் உடனடியாகச் சேர்க்கப்பட்டனர்.
நேற்று நள்ளிரவில் இச்சம்பவம் நடந்தது.
இந்த இரண்டு சம்பவங்கள் குறித்தும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
-
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications