கிரீன் கார்டு முறையை விரிவுபடுத்த ஜெர்மன் திட்டம்
பெங்களூர்:
ஜெர்மனிக்கு வரும் இந்தியர்களுக்கு கிரீன் கார்டு வழங்கும் திட்டம் மேலும் நீட்டிக்கப்பட்டு, விரிவுபடுத்தப்படும்என்று அந்நாட்டு உள்துறை அமைச்சர் ஆட்டோ சிலி கூறினார்.
பெங்களூரில் உள்ள சாப் லேப்ஸ் என்ற சாப்ட்வேர் நிறுவனத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை)நடந்த சாப்ட்வேர்உயர்மட்டக் குழு ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்டு அவர் பேசுகையில் கூறியதாவது:
ஜெர்மனியில் உள்ள சாப்ட்வேர் இன்ஜினியர்கள் தங்கள் குழந்தைகளை தங்களுடன் அழைத்துச் செல்லஅனுமதியளிக்கப்பட்டுள்ளது. ஆனால் அவர்களுடைய பெற்றோர்களையும் அழைத்துச் செல்ல வேண்டுமானால்,அவர் ஒரு வருடமாவது அங்கு தங்கிய பிறகுதான் இயலும்.
மேலும் 5 வருடங்களுக்கு மேலும் ஒருவருக்கு அங்கு வேலை இருக்குமானால் அந்த இன்ஜினியர் அங்கேயேதனது விசாவை புதுப்பித்துக் கொள்ள வசதி உள்ளது.
மேலும் இதுபோன்று வருபவர்களுக்கு ஜெர்மனியில் நிரந்தரக் குடிமகனாக வசிக்க வகை செய்யும் கிரீன் கார்டுதிட்டம் மேலும் நீட்டிக்கப்பட்டு, விரிவுபடுத்தப்படும்.
இதுபோல கடந்த ஆண்டு 10,000 பேர்களுக்கு இந்த வசதியளிக்க ஜெர்மன் அரசு இடஒதுக்கீடு செய்தது. அந்தச்சலுகையை 9,738 பேர் பயன்படுத்தியுள்ளனர். இவர்களில் 2,000 பேர் இந்தியர்கள் என்பது குறிப்பிடத் தக்கது.
விசா வழங்குவதில் ஏற்படும் காலதாமதத்தைக் குறைக்க நாங்கள் தக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். நல்லதொழில்நுட்ப கலைஞர்களையும், சாதாரண மக்களையும் கூட நாங்கள் வரவேற்கிறோம்.
இந்திய சாப்டவேர் இன்ஜினியர்களுக்கு எதிராக முன்பு ஒருவர் எழுப்பிய கோஷம், ஆர்வமிகுதியால் எழுப்பியது.அவர் தற்போது இந்தியர்கள் மீது நல்ல அபிப்ராயம் கொண்டுள்ளார்.
இவ்வாறு அவர் கூறினார்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications