ஆந்த்ராக்ஸ் பீதி - ஜெ.க்கு மலர்க்கொத்து கொடுக்க தடை
சென்னை:
ஆந்த்ராக்ஸ் விஷக்கிருமி தாக்கும் அபாயம் இருப்பதால் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு பூங்கொத்துகள்கொடுக்க போலீசார் தடை விதித்துள்ளனர்.
அமெரிக்கா, இங்கிலாந்து ஆகிய நாடுகளில் சர்வதேச தீவிரவாதி ஓசாமா பின் லேடனின் ஆதரவாளர்கள்ஆந்த்ராக்ஸ் என்னும் விஷக்கிருமியைப் பரப்பி வருகிறார்கள். தபால் மூலம் இந்தக் கிருமிகள் பரப்பப்பட்டுவருகின்றன. இந்தக் கிருமியின் தாக்குதலால் பாதிக்கப்பட்டு சிலர் இறந்துள்ளனர்.
இதேபோன்ற முயற்சிகளை தீவிரவாதிகள் இந்தியாவிலும் மேற்கொண்டுள்ளனர். சென்னை தாம்பரம்விமானப்படை அதிகாரிக்கு வந்த பார்சலில் தொடங்கி, ஈரோட்டில் உள்ள ஒருவருக்கு வந்த தபால் வரை கடந்தசில வாரங்களாக தமிழகத்திலும் இதுபோன்ற மிரட்டல்கள் நடைபெற்று வருகிறது.
இதையடுத்து ஆந்த்ராக்ஸ் கிருமிகள் தலைவர்களுக்கும் அனுப்படும் என்ற அச்சம் பாதுகாப்பு அதிகாரிகளிடையேபரவியுள்ளது. இதையடுத்து முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு, அவரைச் சந்திக்க வருபவர்கள் யாரும்மலர்க்கொத்து (பொக்கே) கொண்டுவரக் கூடாது என்று போலீசார் அறிவித்துள்ளனர்.
தற்போது பொன்னாடை போர்த்த மட்டுமே கட்சித் தொண்டர்களும், மற்ற தலைவர்களும் அனுமதிக்கப்பட்டுவருகின்றனர்.
மலர்க் கொத்து மூலம் ஆந்த்ராக்ஸ் கிருமிகளைப் பரப்ப முடியும் என்பதால், போலீசார் இந்த முன்னெச்சரிக்கைநடவடிக்கையை எடுத்துள்ளனர். இதை அறியாமல் மலர்கொத்து கொண்டு வருபவர்களிடம் போலீசாரே அவற்றைவாங்கி வைத்துக் கொள்கின்றனர்.
இதுபோன்ற அனுபவம் கடந்த ஞாயிற்றுக் கிழமை ஜெயலலிதாவைச் சந்தித்துக் கட்சியில் இணைய வந்த மிசாபாண்டியனுக்கு ஏற்பட்டது.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
கிரிப்டோகரன்சிக்கு மொத்தமாக வேட்டு வைத்த அமெரிக்கா.. நினைத்துகூட பார்க்காத அடி.. கலங்கி நிற்கும் ஈரான்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications