தேவர் நினைவிடத்தில் பன்னீர் அஞ்சலி
சென்னை:
தேவர் ஜெயந்தியையொட்டி ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் கிராமத்தில் உள்ள அவரது நினைவிடத்தில்முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் பிறந்த நாள் மற்றும் மறைவு நாளான செவ்வாய்க்கிழமை காலை மதுரைகோரிப்பாளையத்தில் உள்ள தேவர் சிலைக்கு முதல்வர் பன்னீர்செல்வம் மாலை அணிவித்தார். பின்னர் அங்கிருந்துகார் மூலம் பசும்பொன் கிராமத்திற்கு அவர் சென்றார்.
பசும்பொன் கிராமத்தில் உள்ள தேவர் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். அவருடன்சபாநாயகர் காளிமுத்து, அமைச்சர்கள் அன்வர் ராஜா, துரைராஜ், நைனார் நாகேந்திரன், தளவாய் சுந்தரம், வளர்மதிஜெபராஜ், எம்.பிக்கள் தினகரன், மலைச்சாமி, சீனிவாசன் ஆகியோரும் சென்றிருந்தனர்.
பின்னர் அங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தேவர் புகைப்படக் கண்காட்சியையும் பன்னீர் செல்வம்பார்வையிட்டார்.
சென்னையில்...
சென்னை நந்தனம் சிக்னல் அருகே உள்ள தேவர் சிலைக்கு அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா,அமைச்சர்கள் பொன்னையன், ஜெயக்குமார், சரோஜா ஆகியோர் மாலை அணிவித்தனர்.
மத்திய அமைச்சர் டி.ஆர். பாலு, சென்னை நகர மேயர் மு.க. ஸ்டாலின், தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் வாசன்,காங்கிரஸ் முன்னாள் தலைவர்கள் குமரி அனந்தன், தங்கபாலு ஆகியோரும் மாலை அணிவித்தனர்.
எம்.ஜி.ஆர். அதிமுக சார்பில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் திருநாவுக்கரசு, கொள்கை பரப்புச் செயலாளர் லதாஆகியோரும் மாலை அணிவித்தனர்.
முன்னதாக தமிழ்நாடு தேவர் பேரவை சார்பில் 200 பெண்கள் முளைப்பாரி ஏந்தி ஊர்வலமாக வந்து தேவர்சிலைக்கு மரியாதை செலுத்தினர். ஊர்வலத்திற்கு பேரவைத் தலைவர் சீனிச்சாமித் தேவர் தலைமை தாங்கினார்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications