புதுவை அமைச்சரவை குறித்து ரங்கசாமி சோனியாவிடம் ஆலோசனை
பாண்டிச்சேரி:
புதுவை முதல்வர் ரங்கசாமி இன்று அகில இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தியைச் சந்தித்துஅமைச்சர்கள் தேர்வு குறித்து ஆலோசனை நடத்துகிறார்.
பாண்டிச்சேரியில் புதிய முதல்வராகப் பொறுப்பேற்றிருக்கும் ரங்கசாமி, பதவியேற்றபின் முதல் முறையாக நேற்று(திங்கள்கிழமை) டெல்லி சென்றார்.
அங்கு அவர் காங்கிரஸ் கட்சியின் அகில இந்தியப் பொதுச் செயலாளர் குலாம் நபி ஆசாத்தைச் சந்தித்துஆலோசனை நடத்தினார். புதுவையில் தனது தலைமையில் அமையவிருக்கும் அமைச்சரவையில் இடம்பெறும்அமைச்சர்கள் குறித்து அவர்கள் இருவரும் ஆலோசனை நடத்தியதாகத் தெரிகிறது.
இதுகுறித்து இன்று காங்கிரஸ் தலைவி சோனியா காந்தியிடமும், ரங்கசாமி இன்று ஆலோசனை நடத்துகிறார்.
பாண்டிச்சேரி காங்கிரசுடன் கண்ணன் தலைமையிலான புதுவை மக்கள் காங்கிரசை இணைக்கும் முயற்சி குறித்தும்அப்போது ஆலோசிக்கப்படும் என்று கூறப்படுகிறது.
பிறகு அவர் ஜனாதிபதி கே.ஆர்.நாராயணன், பிரதமர் வாஜ்பாய் மற்ம் உள்துறை அமைச்சர் அத்வானி ஆகியோரைசந்திக்கிறார். முதல்வராகப் பதவியேற்றபின் அவர் மரியாதை நிமித்தமாக இந்தத் தலைவர்களைசந்திக்கவிருப்பதாகக் கூறப்படுகிறது.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்?












Click it and Unblock the Notifications