திருச்சியில் பாஜகவை இழுக்கிறது அதிமுக

Subscribe to Oneindia Tamil

சென்னை:

திருச்சி துணை மேயர் தேர்தலில் பாரதீய ஜனதாக் கட்சியின் உதவியுடன் வெற்றி பெற அதிமுக திட்டமிட்டுள்ளது.இதற்கான முயற்சிகளிலும் அது இறங்கியுள்ளது.

திருச்சி மாநகராட்சியில் திமுக கூட்டணிக்கு அதிக இடங்களில் வெற்றி கிடைத்துள்ளது. இதனால் துணை மேயர்தேர்தலில் திமுக சார்பில் அன்பழகன் போட்டியிடுகிறார்.

இந்த நிலையில் பாரதீய ஜனதாக் கட்சிக்கும், திமுகவுக்கும் இடையே மனக் கசப்பு ஏற்பட்டுள்ளது. அது திருச்சியில்பெரிதாக வெடித்துள்ளது.

துணை மேயர் தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பு தங்களுக்கே அளிக்கப்பட்டிருக்க வேண்டும் என்று பாஜககருதுகிறது. ஆனால் திமுகவே போட்டியிடுவதால் பாஜக அதிருப்தியுடன் உள்ளது. அந்த அதிருப்தியைதங்களுக்குச் சாதகமாக மாற்றும் முயற்சியில் அதிமுகவினர் இறங்கியுள்ளனர்.

அதிமுக சார்பில் வேட்பாளராக மனோகர் நிறுத்தப்பட்டள்ளார். அவருக்கு பாஜகவின் ஆதரவைப் பெறும்முயற்சியில் அதிமுக நிர்வாகிகள் ஈடுபட்டுள்ளனர். தங்களுக்கு ஆதரவாக வாக்களித்தால் பல்வேறு பலன்களைப்பெற்றுத் தருவதாக அவர்கள் பாஜக கவுன்சிலர்களுக்குத் தூது விட்டுள்ளனர்.

இதுதவிர மதிமுக, காங்கிரஸ் கட்சி கவுன்சிலர்களுக்கும் அதிமுக தரப்பு தூது விட்டுள்ளது. சுயேச்சைகளுக்கும் வலைவீசப்பட்டுள்ளது.

அதிமுகவினரின் இந்த பகீரத முயற்சிகளினால் திமுக தரப்பு கதி கலங்கிப் போய் நிற்கிறது. இருப்பினும் சுயேச்சைகவுன்சிலர்கள் 8 பேரில் பாதிப்பேர் திமுக சார்பில் டிக்கெட் கிடைக்காமல் போட்டி வேட்பாளர்களாக நின்று வெற்றிபெற்றவர்கள்.

எனவே அவர்களது ஆதரவு தங்களுக்கே உள்ளதாக திமுக தரப்பு தெரிவித்துள்ளது. பாஜக போனாலும் கூடஅவர்களது ஆதரவை வைத்து எளிதாக வெற்றி பெற்று விடலாம் என்று திமுக தரப்பு தெம்பாக உள்ளது.

ஆனாலும், தேர்தல் சமயத்தில் எது வேண்டுமானாலும் நடக்கலாம் என்பதால் திமுக தரப்பும், அதிமுக தரப்பும்மிகுந்த டென்ஷனுடன் புதன்கிழமைக்காக காத்துக் கொண்டுள்ளனர்.

திருச்சி மாநகராட்சி நலவரம்

மொத்த இடங்கள் - 60

திமுக கூட்டணி - 30

திமுக - 25

பாஜக - 4

எம்ஜிஆர் அதிமுக - 1

அதிமுக கூட்டணி - 20

அதிமுக - 17

தமாகா - 2

மூவேந்தர் முன்னேற்றக் கழகம் - 1

பிற கட்சிகள்

மதிமுக - 1

காங்கிரஸ் - 1

சுயேச்சைகள் - 8 (இவர்களில் 4 பேர் திமுக போட்டி வேட்பாளர்களாக நின்றவர்கள்)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+