தலிபான் படைகள் மீது பி-52 பயங்கர குண்டுவீச்சு
ஜபல் சிராஜ்:
நார்தர்ன் அலையன்ஸ் படைகளுக்கு எதிராக நிறுத்தப்பட்டுள்ள தலிபான் படைகள் மீது அமெரிக்காவின் பி-52 ரகவிமானங்கள் மாபெரும் இன்று (புதன்கிழமை) குண்டு வீச்சுத் தாக்குதல் நடத்தின.
காபூலுக்கு வடக்கே ஷொமாலி மலைப் பகுதியில் மிக உயரத்தில் பறந்து சென்ற பி-52 விமானம் பெரியகுண்டுகளை தலிபான் படையினர் மீது வீசியது. இதையடுத்து அங்கு நிறுத்தப்பட்டுள்ள 6,000 தலிபான்கள் சிதறிஓடினர்.
இந்த குண்டுகள் விழுந்த இடங்களில் சுமம் 30 மீட்டர் உயரத்துக்கு புகையும் தூசியும் கிளம்பியது.
இந்த குண்டுகள் கரபாக் மற்றும் பக்ராம் விமானத் தளத்துக்கு இடையில் நிறுத்தப்பட்டுள்ள தலிபான் படையினர்மீது விழுந்ததாக நார்த்தர்ன் அலையன்ஸ் படையின் கமாண்டர் அமானுல்லா கோசர் கூறினார். அமெரிக்காவின்எப்-18 ரக விமானங்களும் கரபாக், கலோகன், ஹூசைன்கோட், பக்ராம் ஆகிய இடங்களில் தாக்குதல் நடத்தினஎன்றார்.
காபூல், காண்டஹார் மீதும் தாக்குதல்:
அமெரிக்க விமானங்கள் தலிபான்களின் தலைமையகமான காண்டஹார் மீதும் தலைநகர் காபூல் மீதும் கடும்தாக்குதல் நடத்தின. இதில் 8 பேர் காயமடைந்தனர்.
காலை 5 மணிக்கே இந்தத் தாக்குதல் தொடங்கிவிட்டது. மேலும் இங்குள்ள மலைக் குகைகள், பதுங்கு குழிகள்மீதும் குண்டுகள் வீசப்பட்டன.
அமெரிக்கத் தரைப் படை:
இந் நிலையில் ஆப்கானிஸ்தானுக்குள் சில நூறு அமெரிக்கப் படைகள் நுழைந்துள்ளதாக அமெரிக்கா ஒப்புக் கொண்டுள்ளது. இவர்கள் நார்த்தர்ன் அலையன்ஸ்படையினர் உள்ள பகுதியில் நிலை கொண்டிருப்பதாக அமெரிக்க பாதுகாப்புத்துறை அமைச்சர் டொனால்ட் ரம்ஸ்பீல்ட் கூறினார்.
அதே நேரத்தில் சில படைகள் ஆப்கானிஸ்தானின் தென் பகுதியில் அவ்வப்போது நுழைந்து தாக்குதல் நடத்திவிட்டு வருகின்றன. தென் பகுதியில் உள்ள சிலபழங்குடிப் பிரிவினர் தலிபான்களை எதிர்த்து வருகின்றனர். இவர்களின் ஆதரவைப் பெற முயல்வோம் என்றார்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications