நியூயார்க்: இந்தியத் தூதரக பெண் ஊழியர்களுக்கு ஆந்த்ராக்ஸ்
நியூயார்க்:
அமெரிக்காவில் நியூயார்க்கில் உள்ள இந்தியத் தூதரகத்தில் பணியாற்றும் 2 பெண் ஊழியர்களுக்கு ஆந்த்ராக்ஸ்தாக்கியிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
கடந்த திங்கள்கிழமை காலை ஜெயஸ்ரீ அலுவலகத்துக்கு வந்த ஒரு தபாலைப் பிரித்துப் பார்த்தார். அப்போது,அந்தக் கவரில் இருந்து பவுடர் போன்ற பொருள் அவரது முகம் மற்றும் கைகளில் தெறித்தது. இதையடுத்துஅருகில் இருந்த உமா, ஜெயஸ்ரீயின் அருகில் ஓடிவந்து என்ன ஆயிற்று என்று பார்த்தார்.
அப்போது அவர் மீதும் அந்தப் பவுடர் தெறித்து விழுந்தது. இந்த பவுடர் ஆந்த்ராக்ஸ் பாக்டீரியாவாக இருக்கலாம்என்ற சந்தேகம் ஏற்பட்டது.
இதையடுத்து இந்த இருவரையும் மன்ஹாட்டனில் உள்ள லேனக்ஸ் ஹில் மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் இருவரையும் மருத்துவர்கள் தீவிரமாகப் பரிசோதித்து வருகிறார்கள்.தற்போது அவர்களுக்கு ஆந்த்ராக்ஸ் தடுப்பு மருந்தான சிப்ரா கொடுக்கப்பட்டுள்ளது.
தூதரக அலுவலகத்தில் சிதறிய பவுடரை சேகரித்து ரசாயனப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
இதுகுறித்து தூதரக அதிகாரி சஷி திரிபாதி நிருபர்களிடம் கூறியதாவது,
தூதரகத்திற்கு வரும் தபால்கள் நன்றாக பரிசோதனை செய்யப்பட்ட பிறகு தான் உள்ளே பெறப்படுகின்றன.இருப்பினும் அந்தத் தடைகளையெல்லாம் தாண்டி, இந்தத் தபால் வந்துள்ளது.
தற்போது அந்தப் பவுடர் சோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. எங்கள் அலுவலகத்தின் தபால் அறை பூட்டிசீல் வைக்கப்பட்டுள்ளது. மேலும் செவ்வாய்க்கிழமை வழக்கம் போல் அலுவலகம் இயங்கும். பாஸ்போர்ட் மற்றும்விசா வழங்கும் பணி வழக்கம் போல நடைபெறும் என்றார்.
இவரது வீடு தூதரகம் அமைந்துள்ள கட்டிடத்தின் 4-வது மாடியில் அமைந்துள்ளது. தபால் அறை முதல் மாடியில்அமைந்துள்ளது. இந்த அறையில் நாள் தோறும் பாஸ்போர்ட் மற்றும் விசா குறித்து வரும் விண்ணப்பங்கள்மலைபோல குவித்து வைக்கப்பட்டிருக்கும்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications