சென்னை துணை மேயரானார் கராத்தே தியாகு
சென்னை:
சென்னை மாநகராட்சித் துணை மேயர் தேர்தலில் அதிமுகவைச் சேர்ந்த கராத்தே தியாகராஜன் வெற்றிபெற்றார்.இதனால் திமுக-அதிமுக இடையே மாநகராட்சியில் பெரும் மோதல் நடக்கும் என்பது நிச்சயமாகிவிட்டது.
தென் சென்னை மாவட்ட அதிமுக செயலாளராக உள்ள இவர் உள்ளாட்சித் தேர்தலின்போது பெரும் கலவரம்செய்தார். இவர் சென்ற இடமெல்லாம் பிரச்சனை ஏற்பட்டது. கடந்த முறை மாநகராட்சியின் அதிமுக தலைவராகஇருந்த இவர் மேயர் ஸ்டாலினுக்கு பெரும் தலைவலி தந்து வந்தார்.
இப்போது இவரே துணை மேயராகிவிட்டார். மேலும் திமுகவுக்கு இந்த முறை மாநகராட்சியில் மெஜாரிட்டிஇல்லை. எனவே, ஸ்டாலினுக்கு தொடர்ந்து அதிமுக சார்பில் தியாகராஜன் தொல்லை தருவார்.
155 பேர் கொண்ட மாநகராட்சி மாமன்றத்தில் அதிமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளுடன் சேர்த்து 84இடங்களைப் பிடித்துள்ளது. திமுகவுக்கு 70க்கும் குறைவான கவுன்சிலர்களே உள்ளனர்.
திமுக தோல்வி:
இன்று (புதன்கிழமை) துணை மேயர் தேர்தல் நடைபெற்றது. அதில் அதிமுக சார்பில் போட்டியிட்ட கராத்தேதியாகராஜனுக்கு 84 வாக்குகள் கிடைத்தன. திமுக சார்பில் போட்டியிட்ட சங்கரவள்ளிக்கு 66 வாக்குகள் தான்கிடைத்தன. 2 வோட்டுக்கள் செல்லாதவை என அறிவிக்கப்பட்டன.
மொத்தம் 152 பேர் மட்டுமே வாக்குப் பதிவில் கலந்துகொண்டனர். ஒரு இடத்திற்கு இன்னும் தேர்தல்நடக்கவில்லை.
சென்னையில் மாநகராட்சி மேயராக திமுக சார்பில் போட்டியிட்ட மு.க.ஸ்டாலின் மீண்டும் வெற்றி பெற்றார். கடந்த41 ஆண்டுகளாக திமுக தான் சென்னையில் மேயர் பதவி வகித்து வருகிறது.
திமுக எதிர்ப்புக் கோஷம்:
தேர்தலில் கராத்தே தியாகராஜன் வெற்றி பெற்ற செய்தியை மாநகராட்சி ஆணையர் ஆச்சார்யலு அறிவித்தார். பின்னர் அவரும், அமைச்சர்ஜெயக்குமாரும், கராத்தே தியாகராஜனை துணை மேயர் இருக்கையில் அமர வைத்தனர்.
கராத்தே தியாகராஜன் அவரது இருக்கையில் அமர்ந்தபோது, திமுக உறுப்பினர்கள் எதிர்ப்பு கோஷமிட்டனர். இதை எதிர்த்துஅதிமுகவினரும் கோஷமிட்டனர். இதனால் சில நிமிடங்களுக்கு சலசலப்பு ஏற்பட்டது.
-
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
அறிவிப்பு பலகையில் கல்விக் கட்டண விவரங்களை வெளியிட உத்தரவு.. எதிர்த்து தனியார் பள்ளிகள் வழக்கு -
மேகதாது அணை: முதல்வரானதும் டி.கே.சிவகுமார் அதிரடி! முடிவெடுக்க வேண்டியது தமிழ்நாடு இல்லை! -
"கடைசி மூச்சு வரை உங்களுக்காக உழைப்பேன்!" - கலைஞர் கருணாநிதியின் இறுதிப் பேருரை.. என்ன பேசினார்? -
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications