பல கட்சிக் கவுன்சிலர்களை இழுக்கும் அதிமுக
சென்னை:
இன்று மாநகராட்சி துணை மேயர் மற்றும், நகராட்சித் துணைத் தலைவர்கள் தேர்தல் நடைபெறுவதையொட்டிசுயேச்சைகள் மற்றும் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த கவுன்சிலர்கள் அதிமுகவில் சேர்ந்து கொண்டிருக்கிறார்கள்.
இன்று (புதன்கிழமை) 6 மாநகராட்சிகளுக்கான துணை மேயர் தேர்தல் மற்றும் பல உள்ளாட்சிப்பொறுப்புகளுக்கான தேர்தல் நடைபெறுகிறது. நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில், மேயராக வெற்றிபெற்றவரின் கட்சிக்கு பெரும்பான்மை கிடைக்கவில்லை.
இதேநிலைதான் நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளிலும் நிலவுகிறது.
இந்நிலையில் சுயேச்சைகளின் ஆதரவு அதிமுக மற்றும் திமுக ஆகிய கட்சிகளுக்கு அவசியமாகிறது. இதையடுத்து 2கட்சிகளும் சுயேச்சைகளை வளைப்பதில் கடந்த ஒரு வாரகாலமாகத் தீவிரம் காட்டிவருகின்றன.
இதன் பயனாக முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ. சுப்பு நேற்று ஜெயலலிதா முன்னிலையில் அதிமுகவில்இணைந்தார்.
விழுப்புரம், பெரம்பலூர் மற்றும் திருவள்ளர் மாவட்டக்ளில் திமுக, காங்கிரஸ், பா.ஜ.க. மற்றும் சுயேச்சைகளாகநின்று வெற்றி பெற்ற 9 கவுன்சிலர்கள் அதிமுகவில் இணைந்தனர்.
மேலும் சென்னை அருகே உள்ள திருவெற்றியூர், பூந்தமல்லி, கத்திவாக்கம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த திமுக,காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் நிர்வாகிகள் ஜெயலலிதா முனனிலையில் அதிமுகவில் இணைந்தனர்.
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications