மதுரை துணை மேயர் தேர்தலில் வன்முறை: வாக்குப் பெட்டிக்கு சீல் வைப்பு
சென்னை:
மதுரை மாநகராட்சி துணை மேயர் தேர்தலில் ஒரு ஓட்டு குறித்து ஏற்பட்ட மோதல் மற்றும் வன்முறை காரணமாக அங்கு மறுவாக்குப் பதிவு நடந்தது. ஆனால், வன்முறை தொடர்ந்ததால் வாக்கு எண்ணிக்கை நடக்கவில்லை. வாக்குப் பெட்டிக்கு சீல்வைக்கப்பட்டுள்ளது.
மதுரை மாநகராட்சி துணை மேயர் தேர்தலில் திமுக சார்பில் சின்னச்சாமி என்பவரும், அதிமுக சார்பில் சுப்பு என்பவரும்போட்டியிட்டனர். காலையில் வேட்பு மனுத் தாக்கலுக்குப்பிறகு வாக்குப் பதிவு நடந்தது. மேயர் செ.ராமச்சந்திரன் உள்பட 73பேரும் வாக்களித்தனர். அதன் பின்னர் ஓட்டுக்களை எண்ணும் பணி நடந்தது.
ஓட்டு எண்ணும்போது அதிமுக வேட்பாளர் சுப்புவுக்கு விழுந்த ஒரு ஓட்டு குறித்து திமுகவினர் சந்தேகம் கிளப்பினர். அந்த ஓட்டைசெல்லாது என்று அறிவிக்கக் கோரினர். அதேபோல, திமுக வேட்பாளர் சின்னச்சாமிக்கு விழுந்த ஒரு ஓட்டு குறித்தும் அதிமுகவினர்கேள்வி எழுப்பினர்.
இரு ஓட்டுக்களையும் பரிசீலித்த மாநகராட்சி கமிஷனர் ஹர்ஷகாய் மீனா, அதிமுக வேட்பாளருக்கு விழுந்த ஓட்டு செல்லும்என்றும், திமுகவுக்கு ஆதரவாக விழுந்த ஓட்டு செல்லாது என்றும் அறிவித்தார்.
இதையடுத்து அங்கு பெரும் ரகளை மூண்டது. சேர்கள், மைக்குகளை தூக்கி ஒருவருக்கொருவர் வீசித் தாக்கிக் கொண்டனர்.இதையடுத்து போலீஸார் வரவழைக்கப்பட்டு கவுன்சிலர்களை விரட்டினர். வெளியில் வந்தும் வன்முறையைக் கைவிடவில்லைகவுன்சிலர்கள். பெரும் அமளியில் ஈடுபட்ட அவர்களை போலீஸார் விரட்டியடித்தனர்.
பின்னர் அனைத்துக் கட்சித் தலைவர்களுடன் கமிஷனர் மீனா ஆலோசனை நடத்தினார். அதன் முடிவில் மறுவாக்குப் பதிவு நடத்தமுடிவு செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து 3 மணியளவில் மறு வாக்குப் பதிவு நடந்தது.
இன்னும் வாக்கு எண்ணிக்கை தொடங்கவில்லை.
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications