பாமகவின் "சர்க்கஸ்" தொடருமா?
சென்னை:
உள்ளாட்சித் தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சி படுதோல்வி அடைந்ததை அடுத்து, தோல்விக்கான காரணங்களைஆராயவும், திமுக கூட்டணியில் தொடர்வது பற்றி முடிவெடுக்கவும் அக்கட்சியின் பொதுக்குழுக் கூட்டம் வரும் 2ம்தேதி நடைபெறுகிறது.
கடந்த சட்டசபை தேர்தலுக்கு முன்பு திமுக கூட்டணியில் இருந்த பா.ம.க., அதிலிருந்து அதிரடியாக விலகி, அதிமுககூட்டணியில் சேர்ந்தது. அப்போது தமிழகத்தில் ஓரளவு நல்ல வெற்றியைப் பெற்றது. ஆனால் பாண்டிச் சேரிசட்டசபை தேர்தலில் படுதோல்வி அடைந்தது.
இதையடுத்து அதிமுக கூட்டணியில் இருந்து விலகி மீண்டும் திமுக கூட்டணியில் இணைந்து உள்ளாட்சித் தேர்தலைபாமக சந்தித்தது.
உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டியிட்ட, காங்கிரஸ் மற்றும் மதிமுக போன்ற கட்சிகள் செல்லக் கூடியஅளவுக்கு வெற்றிபெற்றுள்ளன. ஆனால், திமுக கூட்டணியில் அங்கம் வகித்த பா.ம.க. படுதோல்வி அடைந்தது. பலஇடங்களில் நான்காவது மற்றும் ஐந்தாவது இடங்களுக்குத் தள்ளப்பட்டது.
இந்தத் தோல்விக்கு திமுக தொண்டர்களின் உள்வேலைகளும் ஒரு காரணம் என்று பாமகவின் மேல்மட்டத்தலைவர்களே நம்புகின்றனர்.
இந்நிலையில் உள்ளாட்சித் தேர்தலில் ஏற்பட்ட தோல்விக்கான காரணங்களை ஆராயவும், திமுக கூட்டணியில்நீடிக்கலாமா அல்லது விலகிவிடலாமா என முடிவு செய்யவும் வரும் 2ம் தேதி பாமகவின் செயற்குழுக் கூட்டம்நடைபெறவிருக்கிறது.
அதற்கு அடுத்த நாளான 3ம் தேதி பொதுக் குழுக் கூட்டமும் நடைபெறுகிறது. இதன் முடிவில் ஒரு புதிய அறிவிப்புவரும் என்று பாமக தொண்டர்கள் எதிர்பாத்துக் கொண்டிருக்கிறார்கள்.
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications