சென்னையில் அதிகரித்துவரும் ரவுடிகளின் ராஜ்ஜியம்
சென்னை:
சென்னையில் கடந்த சில மாதங்களாக ரவுடிகளின் அட்டகாசம் அதிகரித்துள்ளது.
மும்பைதான் இந்தியாவிலேயே தாதாக்களுக்கும், கொள்ளை, கடத்தல், கொலைகளுக்கும் பெயர் போனதாகவிளங்கி வந்தது. தற்போது சென்னை அதை மிஞ்சிக் கொண்டு வருகிறது. தங்களுக்குள்ளாகவே மோதிக்கொள்ளும் ரவுடிகள் போலீசாரையும் பயங்கரமாக எதிர்த்து வருகின்றனர்.
கடந்த திங்கள்கிழமை சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் ஒரு வழக்கிற்கு சாட்சி சொல்ல வந்தவரைஅயோத்தியா குப்பத்தைச் சேர்ந்த வீரமணி கும்பல் வெட்டிக் கொன்றது. பட்டப்பகலில் அதுவும் கோர்ட் போன்றபொதுமக்கள் நடமாடும் இடங்களில் இதுபோன்ற சம்பவங்கள் நடப்பது பொதுமக்கள் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.
கடந்த சில மாதங்களாக பழிவாங்குவதற்காக கொலைகள் நடப்பதும், பணத்திற்காகவும், நிலத்திற்காகவும் ஆட்கள்கடத்தப்படுவதும் சென்னையில் அதிகரித்துள்ளது.
இதுகுறித்து ஒரு மும்பையிலிருந்து சமீபத்தில் சென்னையில் குடியேறிய குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பெண்கூறுகையில்,
நாங்கள் மும்பையில் குற்றங்கள் பெருகி வருவதால் அமைதியான சூழ்நிலையை விரும்பித் தான் சென்னைக்குவந்தோம். இங்கும் தற்போது அதேபோன்ற சம்பவங்கள் நடந்துவருகின்றன. இங்கும் எங்களைப் போன்றபொதுமக்களுக்குப் பாதுகாப்பு இல்லை என்றே நான் நினைக்கிறேன் என்றார்.
இகுறித்து சென்னை மாநகர போலீஸ் கமிஷ்னர் முத்துக்கருப்பன் கூறுகையில்,
நாங்கள் கடந்த சில நாட்களாக உள்ளாட்சித் தேர்தர்லகள் மற்றும் பிரதமரின் சென்னை வருகை ஆகியவற்றில்கவனம் செலுத்தி வந்தோம். ரவுடிகள் இந்த சந்தர்ப்பத்தை தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டார்கள்.
இதுவரை வெவ்வேறு ரவுடிக் கும்பலைச் சேர்ந்த 40 பேரைக் கைது செய்துள்ளோம். விரைவில் ரவுடிகளைப் பிடித்துஅவர்களின் செயல்பாடுகளைக் கட்டுப்படுத்துவோம். இதுகுறித்து பொதுமக்கள் யாரும் பீதியடைய வேண்டாம்என்றார்.


Click it and Unblock the Notifications
