லண்டன் ஓட்டல் வழக்கு: ஜெ.க்கு ஏன் சம்மன்? - நீதிமன்றம் கேள்வி
சென்னை:
லண்டன் ஓட்டல் வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராகும்படி முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு அனுப்பிய சம்மனைரத்து செய்யக் கோரி ஜெயலலிதா தாக்கல் செய்திருந்த மனு மீது விளக்கம் அளிக்கும்படி அரசுக்கு சென்னைஉயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் லண்டனில் 2 ஓட்டல்கள் வாங்கி விற்றதன் மூலம் ரூ.43 கோடி வரை சொத்துச்சேர்த்ததாக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மற்றும் தினகரன் எம்.பி ஆகியோர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்தது.
இந்த வழக்குத் தொடர்பாக 2 பேரையும் சென்னை முதன்மை நீதிமன்றத்தில் ஆஜராகம்படி நீதிபதி அசோக் குமார்சம்மன் அனுப்ப உத்தரவிட்டும், அதை அனுப்பாமல் இருந்தததால் ஜெயலலிதா ஆஜராக வில்லை.
இந்நிலையில் வரும் நவம்பர் 5ம் தேதி ஜெயலலிதா மற்றும், தினகரன் ஆகியோர் ஆஜராகும்படி நீதிமன்றஊழியர்களைக் கொண்டு சம்மன் அனுப்ப உத்தரவிடப்பட்டது.
இந்நிலையில் தனக்கு வழங்கப்பட்ட சம்மனை ரத்து செய்யக் கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜெயலலிதாசார்பில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு நீதிபதி பி.டி.தினகரன் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது ஜெயலலிதா தரப்பில் வக்கீல் அசோகன் ஆஜராகி வாதாடினார். அவர் தனது வாதத்தில்,சொத்துக்குவிப்பு வழக்கு தொடர்பாக, தனிநீதிமன்றத்தில் மேல் விசாரணை செய்யப்பட்டது.
இந்த மேல்விசாரணையின் போதுதான் லண்டனில் ஓட்டல் வாங்கியதாக வழக்குத் தொடரப்பட்டது. மேல்விசாரணைக்க தனிநீதிமன்றம்தான் அனுமதியளித்தது. இந்நிலையில் இந்த வழக்கை முதன்மை செஷன்ஸ்நீதிமன்றம் விசாரிக்க எந்த அதிகார வரம்பும் இல்லை என்றார்.
இதற்கு நீதிபதி, இதுகுறித்து அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என்று கூறி, வழக்கை வரும் 1ம் தேதிக்குஒத்திவைத்தார்.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications