இலங்கை ராணுவக் கப்பல் மீது புலிகள் கடும் தாக்குதல்
கொழும்பு:
இலங்கை ராணுவத்தினருக்கு எரிபொருள் ஏற்றிச் சென்ற சரக்குக் கப்பலை விடுதலைப் புலிகளின் தற்கொலைப்படையினர் தாக்கினர். இதில் பலத்த சேதமடைந்த அந்தக் கப்பல் மூழ்கி வருகிறது.
நேற்றிரவு இலங்கையின் தென் பகுதியில் இருந்து திரிகோணமலைக்கு சில்க் பிரைட் என்ற இந்தக் கப்பல் சென்றுகொண்டிருந்தது. பாயிண்ட் பெட்ரோ என்ற இடத்தில் இந்தக் கப்பல் நங்கூரமிடப்பட்டு நிறுத்தப்பட்டிருந்தது.
அப்போது 5 படகுகளில் வந்த விடுதலைப் புலிகள் கப்பலை சுற்றி வளைத்தனர். ஒரு படகில் முழுவதும்குண்டுகளை ஏற்றிக் கொண்டு வந்திருந்த அவர்கள் கப்பல் மீது வேகமாக வந்து மோதினர்.
இதில் அந்தக் கப்பல் படகு வெடித்துச் சிதறியது. அதில் இருந்த 2 பெண் புலிகள் உள்பட 4 பேரும் இறந்தனர். இத்தாக்குதலில் கப்பலுக்குப் பெருத்த சேதமடைந்து தீப் பிடித்து எரிந்தது. உடனடியாக அதக் கப்பல் மூழ்கத்தொடங்கியது.
இதையடுத்து இலங்கை கடற்படையினர் விரைந்து வந்தனர். கப்பலில் இருந்த 12 மாலுமிகளையும் 16பயணிகளையும் மீட்டனர்.
இப்போது இந்தக் கப்பல் காங்கேசன்துரைக்கு இழுத்துச் செல்லப்பட்டுள்ளது. மூழ்கிக் கொண்டிருக்கும் இந்தக்கப்பலை காப்பாற்ற கடற்படையினர் பெரும் முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர்.
கப்பலில் தீ அணைக்கப்பட்டுவிட்டது. இதில் 650 டன் மண்ணெண்ணையும் டீசலும் உள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications