ராஜ்குமாரைக் கடத்த உதவிய 2 வீரப்பன் கூட்டாளிகள் கைது
தொட்டகாஜனூர் காட்டுப் பகுதி:
கன்னட நடிகர் ராஜ்குமாரைக் கடத்த சந்தன வீரப்பனுக்கு உதவிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் 3பேரைத் தேடி வருகின்றனர்.
இவர்களில் பசவன்னா என்பவர் நேற்று இரவு திடீரென ஈரோடு மாவட்டம் திக்நாரை கிராமத்தைச் சேர்ந்த கிராமஅதிகாரி முன் தானாகவே சரணடைந்தார். ராஜ்குமாரைக் கடத்த வீரப்பனுக்கு தானும் நாகராஜ் என்பவரும் மேலும்3 பேரும் உதவியதாக அவர் தகவல் கொடுத்தார்.
இதையடுத்து இவரை கிராம அதிகாரி போலீசாரிடம் ஒப்படைத்தார். அவர் கொடுத்த தகவலின்பேரில்மல்லுக்குத்திபுரம் என்ற இடத்திற்கு ரகசியமாய் விரைந்த சிறப்புப் போலீஸ் படை இன்று காலை அங்கு நாகராஜைக்கைது செய்தனர். பசவன்னா தாளவாடி பகுதியைச் சேர்ந்தவர்.
தொட்டகாஜனூரில் தனது பண்ணை வீட்டில் குடும்பத்துடன் தங்கியிருந்த ராஜ்குமாரின் நடவடிக்கைகள்,நடமாட்டம் குறித்து வீரப்பனுக்கு இந்த இருவரும் மேலும் 3 பேரும் தொடர்ந்து தகவல் கொடுத்து வந்துள்ளனர்.
இவர்கள் கொடுத்த தகவலின்பேரில் தான் ராஜ்குமாரை வீரப்பன் இரவில் வந்து கடத்திச் சென்றுள்ளான். இந்தத்தகவல்களை இவர்களே போலீசாரிடம் தெரிவித்துள்ளனர்.
இவர்களிடம் இருந்து 2 நாட்டுத் துப்பாக்கிகள், 20 ஜெலாட்டின் குச்சிகள், 20 டெடொனேட்டர்களையும் போலீசார்பறிமுதல் செய்தனர்.
இந்தக் கடத்தலில் மொத்தம் 22 பேருக்குத் தொடர்புள்ளதாக இவர்களிடம் நடத்திய விசாரணையில்தெரியவந்துள்ளது.
2000ம் ஆண்டு ஜூன் 31ம் தேதி இரவில் ராஜ்குமார் கடத்தப்பட்டார். அவரை 108 நாட்கள் பணயக் கைதியாகவைத்திருந்தான் வீரப்பன். நக்கீரன் ஆசிரியர் கோபாலால் அவரை மீட்க முடியாமல் போகவே, பழ.நெடுமாறன்தான் வீரப்பனுடன் பேசி அவரை விடுவித்து வந்தார்.
இந்தச் சம்பவத்தையடுத்து வீரப்பனைப் பிடிக்க தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதிமுக ஆட்சிக்கு வந்தபின்னர் தேவாரம் தலைமையில் சிறப்பு அதிரடிப்படை காட்டுக்குள் புகுந்து வீரப்பனைத் தேடிக்கொண்டேடடடடட.... இருக்கிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications