ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில்: இந்தியாவுக்கு பிரான்ஸ், ரஷ்யா ஆதரவு
Subscribe to Oneindia Tamil
ஐக்கிய நாடுகள்:
ஐக்கிய நாடுகள் சபையின் நிரந்தரப் பாதுகாப்புக் குழுவில் இந்தியாவுக்கும் இடம் தர வேண்டும் என்று பிரான்ஸ்,ரஷ்யா, ஆர்மீனியா மற்றும் வியட்நாம் போன்ற நாடுகள் வலியுறுத்தியுள்ளன.
ரஷ்யாவும் வியட்நாமும் ஏற்கனவே இந்தியாவையும் இக்குழுவில் சேர்ப்பதற்கு தங்களது ஆதரவைத் தெரிவித்துவந்த போதிலும், பிரான்சும் ஆர்மீனியாவும் இப்போதுதான் தங்கள் வாயைத் திறந்துள்ளன.
பாதுகாப்பு விஷயத்தில் இந்தியா வலிமையான நாடாக இருப்பதால் ஐ.நா. பாதுகாப்புக் குழுவில் அந்நாட்டையும்சேர்ப்பதில் சந்தேகமே தேவையில்லை என்று ரஷ்யா தன்னுடைய ஆதரவை வலுவாகத் தெரிவித்துள்ளது.
வளர்ந்த நாடுகள் எதையும் இனி இந்தப் பாதுகாப்புக் குழுவில் சேர்க்கக் கூடாது என்ற இந்தியாவின் நிலையையும்பிரான்ஸ் ஆதரித்துள்ளது.












Click it and Unblock the Notifications