உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள்: கட்சியினரிடம் கருத்து கேட்கிறது திமுக
சென்னை:
உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் குறித்து தமிழகம் முழுவதும் உள்ள திமுக பிரதிநிதிகளிடம் கருத்தக் கேட்கஅக்கட்சியின் தலைமைக் கழகம் முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து சென்னையில் நேற்று(புதன்கிழமை) திமுக பொதுச் செயலாளர் அன்பழகன் வெளியிட்டுள்ளஅறிக்கையில் கூறியிருப்பதாவது,
நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தல் முடிவு குறித்து தமிழகம் முழுவதும் மாவட்ட வாரியாகக் கருத்துக் கேட்கதலைமைக் கழகம் முடிவு செய்துள்ளது. இதற்காக 4 தலைமைக் கழக நிர்வாகிகள் குழு நியமிக்கப்பட்டுள்ளது.
இவர்களிடம் அந்தந்த மாவட்ட, வட்டார மற்றும் ஒன்றிய திமுக பிரதிநிதிகள் தங்கள் கருத்துக்களைத் தெரிவிக்கவேண்டும். இவர்கள் தங்கள் கருத்துக்களை நிர்வாகிகளிடம் நேரடியாகவோ அல்லது கடிதம் மூலமாகவோதெரிவிக்கலாம்.
கருத்துக் கேட்கும் பணி வரும் நவம்பர் 8ம் தேதி முதல் 17ம் தேதி வரை நடைபெறும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications