மதுரை அருகே ஓடும் ரயிலில் ரூ.6 லட்சம் கொள்ளை
மதுரை:
மதுரை அருகே ஓடும் ரயிலில் ஒரு வியாபாரியை வெட்டி, ரூ.6 லட்சம் கொள்ளையடிக்கப் பட்டது. கொள்ளைக்கும்பலைப் போலீசார் தீவிரமாகத் தேடிவருகின்றனர்.
கடந்த திங்கள் கிழமை இரவு ராமேஸ்வரத்திலிருந்து திருச்சி நோக்கி சென்று கொண்டிருந்த ரயிலில் திருச்சி பெரியசெட்டித் தெருவைச் சேர்ந்த நகை வியாபாரி ரமேஷ் மற்றும் அவரிடம் பணிபுரியும் பாலு ஆகியோர் சென்றனர்.
இவர்கள் இருவரும் பழைய நகைகளை வாங்கி விற்கும் தொழில் செய்து வந்தனர். ராமேஸ்வரம் சத்திரக்குடிஅருகே ரயில் வந்துகொண்டிருக்கும் போது அவர்கள் இருந்த ரயில் பெட்டிக்குள் 2 பேர் புகுந்தனர்.
அவர்கள் பாலுவின் அருகே சென்று அவர் அணிந்திரந்த நகைகளைப் பறிக்கும் போது அவர் கீழேவிழுந்துவிட்டார். அவரைக் காப்பாற்றச் சென்ற ரமேஷை அவர்கள் கத்தியால் வெட்டினர்.
பிறகு ரமேஷ் அணிந்திருந்த நகைகளையும், பணப்பையையும் பறித்தனர். அந்தப் பைக்குள் ரூ.2 லட்சம் மதிப்புள்ளதங்க நகைகள் மற்றம் ரூ.4 லட்சத்து 60 ஆயிரம் ரொக்கப் பணமும் இருந்தது.
இதுகுறித்து ரயில் பயணச் சீட்டுப் பரிசோதகருக்கத் தகவல் தரப்பட்டது. உடனே அவர் அபாயச் சங்கிலியைப்பிடித்து இழுத்து ரயிலை நிறுத்தினார். அந்த நேரத்தில் கொள்ளையர்கள் ரயிலிருந்து இறங்கித் தப்பி ஓடினர்.
இதுகுறித்து ரமேஸ் மற்றம் பால ஆகியோர் மதுரை போலீசிடம் புகார் கொடுத்தனர். இதையடுத்துகொள்ளையர்களைப் பிடிக்க ரயில்வே ஐஜி சேகர் உத்தரவின் பேரில் தனிப் போலீஸ் படை அமைக்கப்பட்டது.போலீசார் கொள்ளையர்களைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications