ஆண் கவுன்சிலரை செருப்பைக் காட்டி மிரட்டிய பெண் கவுன்சிலர்
சென்னை:
சென்னை துரைப்பாக்கம் பஞ்சாயத்து யூனியன் வார்டு உறுப்பினர் ஹரிகிருஷ்ணனை இன்னொரு பெண்கவுன்சிலர் செருப்பைக் காட்டி மிரட்டியதாக போலீஸில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
சென்னை புறநகர்ப் பகுதியான துரைப்பாக்கம் பஞ்சாயத்து யூனியனில் கவுன்சிலராக இருப்பவர் ஹரிகிருஷ்ணன்.அதே பஞ்சாயத்தில் கவுன்சிலராக இருப்பவர் லலிதா. தேர்தல் தொடர்பாக இருவருக்கும் இடையே தகராறுஇருந்ததாக தெரிகிறது.
இந்நிலையில் வெள்ளிக்கிழமை காலை லலிதா ஒரு கும்பலுடன் ஹரிகிருஷ்ணனின் வீட்டிற்கு வந்தார். அங்கு தரக்குறைவாக பேசி ஹரியைத் திட்டியுள்ளார்.
இதையடுத்து இரு தரப்பினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் தனது செருப்பைக் கழற்றிய அந்தப்பெண் கவுன்சிலர் அதை ஆண் கவுன்சிலர் ஹரிகிருஷ்ணன் முகத்துக்கு எதிரே நீட்டி மிரட்டினார்.
பெண் என்பதால் அவரை அடிக்க முடியாத ஹரிகிருஷ்ணன் இது தொடர்பாக துரைப்பாக்கம் போலீஸில் புகார்கொடுத்துள்ளார்.
பதவிக்கு வந்து ஒரு வாரம் கூட ஆகாத நிலையில் பெண் கவுன்சிலரின் இந்த ஆகாத செயல் அனைவரையும்அதிர்ச்சியடையச் செய்துள்ளது.
-
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications