மீண்டும் காங்கிரசில் ஜெயந்தி நடராஜன், தனுஷ்கோடி ஆதித்தன்?
சென்னை:
முன்னாள் மத்திய அமைச்சர்களான ஜெயந்தி நடராஜனும் தனுஷ்கோடி ஆதித்தனும் விரைவில் காங்கிரஸ் கட்சியில்சேரத் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
தன் வழிக்கு வர தமிழ் மாநில காங்கிரஸ் மறுப்பதால், அக்கட்சியை உடைக்க காங்கிரஸ் மேலிடம் பச்சைக் கொடிகாட்டியுள்ளதாம்.
ஜெயந்தி நடராஜன், தனுஷ்கோடி ஆதித்தன் உள்பட ஒரு பெரும் குழுவே தற்போது தமாகாவை விட்டுகாங்கிரசுக்குத் தாவ காத்துக் கொண்டிருக்கிறது. இதற்கான ரகசியப் பணிகளில் ஜெயந்தியும் காங்கிரஸ்தலைமையும் ஈடுபட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
அகில இந்திய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி விரைவில் சென்னை வரவுள்ளார். அப்போது அவர்முன்னிலையில் இவர்கள் காங்கிரசில் சேர முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.
மேலும் பல முக்கியத் தமாகா தலைவர்களையும் இழுப்பதற்கான முயற்சியிலும் காங்கிரஸ் இறங்கியுள்ளதாம்.
ஜெயந்தி தற்போது அமெரிக்காவில் இருக்கிறார்.












Click it and Unblock the Notifications