பொது இடங்களில் தம் அடிக்க சுப்ரீம் கோர்ட் தடை
டெல்லி:
நாடு முழுவதும் பொது இடங்களில் புகை பிடிப்பதற்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
மஹாஷ்டிர மாநில காங்கிரஸ் பிரமுகர் முரளி தியோரா சுப்ரீம் கோர்ட்டில் ஒரு பொதுநல வழக்குத்தொடர்ந்திருந்தார். அதில் பொது இடங்களில் புகைபிடிப்பதைத் தடைசெய்ய வேண்டும் என்றும், சிகரெட்நிறுவனங்கள் விளம்பர விதிகளை மீறுவதை தடுக்க வேண்டும் என்றும் கோரியிருந்தார்.
இந்த மனு மீது நீதிபதிகள் எம்.பி.ஷா, மற்றும் ஆர்.பி.சேத்தி ஆகியோர் விசாரணை நடத்தி வந்தனர். இந்த வழக்கில்நீதிபதிகள் இன்று தீர்ப்பளித்தனர். அவர்கள் அளித்த உத்தரவு விவரம்:
பொது இடங்களில் புகை பிடிப்பதற்கு அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் தடைவிதிக்கவேண்டும்.
மேலும் டெல்லி, மும்பை, சென்னை, கொல்கத்தா, பெங்களூர் மற்றும் அஹமதாபாத் நகரங்களின் போலீஸ்கமிஷ்னர்கள், புகைபிடிப்பதைத் தடுக்கவும், சிகரெட் கம்பெனிகள் விதிமுறைகளை மீறி விளம்செய்வதைத்தடுக்கவும் தாங்கள் எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து இன்னும் 6 வாரங்களுக்குள் எங்களுக்கு அறிக்கைஅனுப்ப வேண்டும்.
பொது இடங்கள் என்பதில் மருத்துவமனைகள், பஸ் நிலையங்கள், ரயில் நிலையங்கள், பொது நிறுவனங்கள்,நீதிமன்றங்கள், கல்வி நிறுவனங்கள், நூலகங்கள் மற்றும் விளையாட்டு மைதானங்கள் ஆகியவை அடங்கும்.
இவ்வாறு நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் கூறியுள்ளனர்.
இந்த வழக்கில் மனுதாரர் சார்பில் இந்திரா ஜெய்சிங் ஆஜராகி வாதாடினார். மத்திய அரசின் சார்பில் அட்வகேட்ஜெனரல் சோலி சொராப்ஜி ஆஜரானார். அவர் புகைபிடிப்பத தடைசெய்ய வேண்டும் என்பதற்கு ஜெய்சிங் எடுத்துக்கூறிய காரணங்களை ஆமோதித்தார்.
ஏற்கனவே கோவா மற்றும் டெல்லியில் பொது இடங்களில் புகை பிடிப்பது தடைசெய்யப்பட்டுள்ளது.
தமிழகத்திலும் தடைசெய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இன்னும் அமல்படுத்தப்படவில்லை.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications