11ம் தேதி சென்னையில் கூடுகிறது தமாகா செயற்குழு
சென்னை:
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் வரும் 11ம் தேதி சென்னையில் கூடுகிறது என்றுஅக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் ஞானதேசிகன் அறிவித்துள்ளார்.
நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தல் குறித்து விவாதிக்க தமாகாவின் செயற்குழு வரும் 11ம் தேதி சென்னையில்கூடுகிறது. காலை 10 மணிக்கு கட்சி தலைமையகமான சத்தியமூர்த்திபவனில், தலைவர் ஜி.கே.வாசன் தலைமையில்கூட்டம் நடைபெறும் என்று தமாகா வெளியிட்டுள்ள அறிக்கையில் ஞானதேசிகன் கூறியுள்ளார்.
ஜி.கே.வாசன் தமாகா தலைவராக பொறுப்பேற்ற பின் அவர் தலைமையில் நடைபெறும் முதல் செயற்குழு கூட்டம்இது என்பதால் இந்த கூட்டம் முக்கியத்துவம் பெறுகிறது.
இக்கூட்டத்தில் செயற்குழு உறுப்பினர்கள் தவிர, எம்.எல்.ஏக்கள், எம்.பிக்கள், மாவட்ட தலைவர்கள், கட்சியின்முன்னணி அமைப்பு தலைவர்களும் பங்கேற்கவுள்ளனர்.
உள்ளாட்சி தேர்தலில் துணை மேயர் தேர்தல், உள்ளாட்சி அமைப்புகளின் துணை தலைவர்கள் தேர்தலில்அதிமுகவின் அணுகுமுறையும், செயல்பாடும் தமாகா தொண்டர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தி இருப்பதால் அதுகுறித்தும் விரிவான விவாதம் நடைபெறும் என்று கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications