புலிகளுக்குத் தனி நாடு தர ரணில் திட்டம்: சந்திரிகா புகார்
கொழும்பு:
இலங்கையில் ரணில் விக்ரமசிங்கேயின் யுனைட்ட்ெ நேஷனல் பார்ட்டி ஆட்சிக்கு வந்தால், விடுதலைப் புலிகளுக்குதனி நாடு கொடுக்கத் திட்டமிட்டுள்ளது என அதிபர் சந்திரிகா குமாரதுங்கா குற்றம் சாட்டியுள்ளளார்.
இலங்கையில் ஆளும் மக்கள் கூட்டணிக் கட்சியின் தலைவர் சந்திரிகா குமாரதுங்கா அனுராதபுரத்தில் பிரச்சாரம்செய்தார். அப்போது அவர் கூறியதாவது,
நடைபெறவிருக்கும் தேர்தல் இலங்கையில் நாட்டின் ஒற்றுமையும், இறையாண்மையும் நிலைத்து நிற்குமா நிற்காதாஎன்பதைத் தீர்மானிக்கும் தேர்தலாக இருக்கும்.
எதிர்க்கட்சியான யுனைட்ட்ெ நேஷனல் பார்ட்டி ஆட்சிக்கு வந்தால் விடுதலைப்புலிகளுக்குத் தனி நாடு பிரித்துக்கொடுக்கும் முடிவில் இருப்பதாகத் தெரிகிறது. அந்தக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கே, விடுதலைப்புலிகளுடன் ரகசியத் தொடர்பு வைத்துள்ளார்.
தமிழ்க் கட்சிகளைக் கூட்டணி சேர்த்துள்ள எதிரணியினர், நமது ஆட்சியை நீக்கிவிட்டு, விடுதலைப்புலிகள் தளபதிபிரபாகரன் விரும்பும் தலைவரின் ஆட்சியை எற்படுத்தப் போவதாக வெளிப்படையாகப் பிரச்சாரம் செய்துவருகின்றனர்.
விடுதலைப்புலிகள் தற்போது ஒரு வலிமையில்லாத தலைவர் நாட்டை ஆளவேண்டும் என்று விரும்புகிறார்கள்.அப்போதுதான் அவர்களால் வடக்குப் பகுதியில் தங்கள் ஆதிக்கத்தைத் தொடங்கி, பிறகு நாடுமுழுவதையும்தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியும்.
எதிர்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்கே இன்னம் 24 மணி நேரத்திற்குள், விடுதலைப்புலிகளுக்கு அவர்அளித்துள்ள வாக்குறுதிகள் பற்றி உலகத்துக்குத் தெரிவிக்க வேண்டும். இல்லாவிட்டால், அவர் தேர்தல் பிரச்சாரம்செய்வதற்கே தகுதியற்றவராகி விடுவார்.
இவ்வாறு சந்திரிகா கூறினார்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications