எல்.டி.டி.ஈ. தீவிரவாத இயக்கம்: அமெரிக்கா அறிவிப்பு
Subscribe to Oneindia Tamil
கொழும்பு:
லஷ்கர்-ஏ-தொய்பா, ஜெய்ஷ்-ஏ-முகம்மத் ஆகிய அமைப்புகளுடன் சேர்ந்து விடுதலைப் புலிகளையும் தீவிரவாதஅமைப்பாக அமெரிக்கா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
செப்டம்பர் 11ம் தேதி நியூயார்க்கில் நடந்த உலக வர்த்தக மையத்தின மீதான தாக்குதலையடுத்து பல அரேபியஇயக்கங்கள் தீவிரவாத அமைப்புகளாக அறிவிக்கப்பட்டன.
இதில் எல்.டி.டி.ஈ. முதலில் விடுபட்டிருந்தது. ஆனால், இலங்கை அரசின் நெருக்குதலையடுத்து புலிகள்இயக்கத்தை தீவரவாத இயக்கமாக அமெரிக்க பாதுகாப்பு அமைச்சகம் அக்டோபர் 11ம் தேதி அறிவித்தது.
அமெரிக்காவின் அட்டர்னி ஜெனரல் ஜான் அஸ்க்ராப்ட் இது தொடர்பாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை அமெரிக்கவெளியுறவுத்துறைக்கு நேற்று அனுப்பினார்.












Click it and Unblock the Notifications