ஹை-டெக் ஆயுதங்கள்: அமெரிக்காவின் தடையை நீக்க இந்தியா கோரிக்கை
டெல்லி:
இந்தியாவுக்கு வரும் அமெரிக்க பாதுகாப்புத் துறை அமைச்சர் டொனால்டு ரம்ஸ்பீல்டிடம், உயர்தொழில்நுட்பஆயுதங்களை இந்தியாவுக்கு வழங்குவதில் உள்ள தடையை நீக்கக் கோரிக்கை விடுக்கப்படும் என்று பாதுகாப்புத்துறை அமைச்சர் ஜார்ஜ் பெர்ணான்டஸ் கூறினார்.
ரம்ஸ்பீல்டின் குறுகிய காலச் சுற்றுப்பயணத்தின் போது அவருடன் நான் 2 மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தத்திட்டமிடப்பட்டுள்ளது. அப்போது இருநாட்டு பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து பேச்சு நடத்தப்படும்.
மேலும் இந்தியாவுக்கு ஆள் இல்லாத ஏவுகனைக் கருவிகள், மூடுபனியில் எதிரிகளைக் கண்டறியும் கருவிகள்,கன்னிவெடியில் பாதிக்கப்படாத வாகனங்கள் மற்றும் உயர் தொழில்நுட்ப ஆயுதங்கள் ஆகியவற்றை விற்பனைசெய்ய விதிக்கப்பட்டிருக்கும் தடையை நீக்கக் கோருவோம்.
இந்தத் தடை கடந்த 1998ம் ஆண்டு இந்தியா நடத்திய போக்ரான் அணுகுண்டு சோதனைக்குப் பிறகு தான் வந்ததுஎன்று சிலர் தவறாகக் கூறிவருகின்றனர். உண்மையில் இந்தத் தடையை கடந்த 1950ம் ஆண்டே அமெரிக்காவிதித்துள்ளது.
மேலும் தற்போது வாங்கவிருக்கும் ஆயுதங்கள் அனைத்தும் பாகிஸ்தானைத் தாக்க வேண்டும் என்ற நோக்கில்வாங்கப்படுவதல்ல. அதற்கும் மேலாக நம் நாட்டின் பாதுகாப்பை மேம்படுத்த எடுக்கப்படும் நடவடிக்கைகள்ஆகும்.
ஆப்கானிஸ்தானில் பாகிஸ்தானால் ஆதரிக்கப்பட்ட தலிபான்களை எதிர்த்து பாகிஸ்தானே போரில் பங்கேற்கும்நிலை தற்போது ஏற்பட்டுள்ளது.
மேலும் ஆப்கான் மீது அமெரிக்கா நடத்திவரும் தாக்குதல், உலகம் முழுவதும் உள்ள தீவிரவாதிகளுக்கு எதிராகத்திரும்ப வேண்டும். தற்போதுள்ள சூழ்நிலையை வைத்து, அமெரிக்க காஷ்மீர் தீவிரவாதிகள் மீது தாக்குதல்நடத்துமா என்று கூறமுடியாது என்றார் பெர்னாண்டஸ்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications