ஜெ.க்கு கொலை மிரட்டல்: சட்டம், ஒழுங்கு சீர்குலைவு தெளிவாகிறது - கருணாநிதி
சென்னை:
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவைக் கொலை செய்வோம் என்று தமிழ்த் தீவிரவாத இயக்கம் விடுத்துள்ளமிரட்டலின் மூலம், தமிழ்நாட்டில் எந்த அளவுக்கு சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது என்பதும், எந்த அளவுக்குபிரிவினைவாதம் வளர்ந்துள்ளது என்பதும் விளங்கும் என்று திமுக தலைவர் கருணாநிதி கூறினார்.
தமிழ்நாடு விடுதலைப்படை என்ற தீவிரவாத அமைப்பினர், சில பத்திரிக்கைகளுக்கு அனுப்பிய இ-மெயில்கடிதத்தில், தமிழ்ப் பொருளாதாரத்தை சீர்குலைத்த அரசியல் தலைவர்களைக் கொலைசெய்வோம் என்றும்முதற்கட்டமாக ஜெயலலிதா நீதிமன்றத்துக்கு வரும்போது அவரைக் கொலை செய்வோம் என்றும் மிரட்டல்விடுத்துள்ளனர்.
இதுகறித்து சென்னையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நிருபர்களுக்குப் பேட்டியளித்தபோது கருணாநிதி மேலும்கூறியதாவது:
ஜெயலலிதாவைக் கொலை செய்வோம் என்று தமிழக விடுதலைப்படையினர் மிரட்டல் விடுத்துள்ளனர். இதன்மூலம் தமிழகத்தில் எந்த அளவுக்கு சட்டம் ஒழுங்கு சீர் கெட்டுள்ளது என்பதும், எந்த அளவுக்கு பிரிவினைவாதம்வளர்ந்துள்ளது என்பதும் விளங்கும்.
வீரப்பனைப் பிடிப்போம் என்று வெற்று வார்த்தைகள் தான் வெளிவருகிறதே தவிர அவரைப் பிடிப்பது போலத்தெரியவில்லை.
வீரப்பனைப் பிடிக்கும் பணியில் சிறப்பு அதிரடிப்படைக்கு தலைவராக நியமிக்கப்பட்டுள்ள முன்னாள் டி.ஜி.பி.தேவாரத்தால் வீரப்பனை பிடிக்க முடியவில்லை. தன் இயலாமையை மறைப்பதற்காக கடந்த திமுக ஆட்சியின் மீதுதேவையில்லாமல் பழியைப் போடுகிறார்.
திமுகவுக்கும், பாரதிய ஜனதாவுக்கும் இடையில் எந்தவித சிறு பிளவும் ஏற்படவில்லை. ஆனால் வைகோபோன்றவர்கள் தான் பிளவு ஏற்பட்டுவிட்டது என்று சொல்லிவருகிறார்கள். ஏனென்றால் அவர்கள் தான் பிளவுஏற்படுத்த முயற்சிக்கிறார்கள்.
தமிழகத்தில் அதிமுக ஆட்சிக்கு வந்த 6 மாதங்களில், அரசுக்கு நிதிப்பற்றாக்குறை ஏற்பட்டுவிட்டது. இதனால்தமிழகத்தில் அதிமுக அரசு கொண்டுவந்த புதிய திட்டங்கள் எதுவும் இன்றும் தொடங்கப்படாமலேஇருக்கிறது.இதன் மூலம் நிதித்துறையைக் கையாள்வதில் அவர்களிடம் உள்ள இயலாமை புரிகிறது.
ஆனால் அதற்குத் திமுக தான் காரணம் என்று அவர்கள் சொல்கிறார்கள். திமுக ஆட்சிப் பொறுப்பை விட்டு அகலும்போது தமிழக அரசின் கஜானா நிரம்பியிருந்தது.
இவ்வாறு அவர்கூறினார்.
-
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
ரொம்ப அவசரப்படாதீங்க அண்ணாமலை.. அமித் ஷா போட்ட அன்புக் கட்டளை! இன்னும் தமிழ்நாடு திரும்பாதது ஏன்? -
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம் -
பலே ஆளுங்க அண்ணாமலை.. ‘பயோ’வைப் பாருங்களேன்! பிள்ளையையும் கிள்ளி.. தொட்டிலையும் ஆட்டி.. பரபர பாஜக! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
அமைச்சர் ராஜ்மோகனுக்காக கருணாநிதி புகைப்படம் அகற்றமா? கொந்தளித்த வைரமுத்து.. என்ன நடந்தது? -
மாஸ்டர் பிளான் போட்ட கருணாநிதி.. சென்னை வள்ளுவர் கோட்டத்தில் செங்கற்களில் அன்று நடத்திய சரித்திரம் -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை?












Click it and Unblock the Notifications