உள்ளாட்சித் தேர்தல் செயல்பாடு: பா.ஜ.க. ஆலோசனை
Subscribe to Oneindia Tamil
சென்னை:
உள்ளாட்சித் தேர்தலில் தங்கள் கட்சியின் செயல்பாடு குறித்து ஆலோசிக்க தமிழக பா.ஜ.கவின் பார்வையாளர்கள்கூட்டம் இன்று சென்னையில் தொடங்கியது.
கட்சித் தலைமையகத்தில் நடக்கும் இக் கூட்டத்தில் தேர்தலில் வென்ற பஞ்சாயத்து, ஊராட்சி மன்ற உறுப்பினர்கள்,கவுன்சிலர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
கூட்டம் மாநிலத் தலைவர் கிருபாநிதி, பொதுச் செயலாளர் எல்.கணேசன், தேசியப் பொருளாளர் சுகுமாறன்நம்பியார் ஆகியோர் முன்னிலையில் நடக்கிறது.
உள்ளாட்சித் தேர்தலின்போது பா.ஜ.க. சந்தித்த பிரச்சனைகள், கட்சியின் எதிர்காலத் திட்டம் ஆகியவை குறித்துகூட்டத்தில் விவாதிக்கப்பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications