பாகிஸ்தான் தாக்குதலில் இறந்த கன்னியாகுமரி வீரர்
Subscribe to Oneindia Tamil
கன்னியாகுமரி:
பாகிஸ்தான் ராணுவத்தால் கொல்லப்பட்ட கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த எல்லைப் பாதுகாப்புப் படைவீரர் நாராயணனின் உடல் அவரது சொந்த ஊரில் அரசு மரியாதைகளுடன் அடக்கம் செய்யப்பட்டது.
கன்னியாகுமரி மாவட்டம் சுக்குப்பாறை என்ற ஊரைச் சேர்ந்த நாராயணன், ஒரு எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்.
ராஜஸ்தான் மாநில எல்லைப்பகுதியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தபோது பாகிஸ்தான் ராணுவதாக்குதலில் அவர் இறந்தார்.
அவரது உடல் சுக்குப்பாறைக்குக் கொண்டு வரப்பட்டது. அங்கு முழு அரசு மரியாதைகளுடன் உடல் அடக்கம்செய்யப்பட்டது.












Click it and Unblock the Notifications