வாக்காளர்களே, இன்று உங்கள் பெயரை சேர்க்கலாம்
சென்னை:
தமிழகம் முழுவதிலும் திங்கள்கிழமை முதல் வாக்காளர் பட்டியல் திருத்தும் பணி துவங்குகிறது. ஒரு மாத காலத்திற்கு இந்தப் பணிநடைபெறும்.
சுமார் 50,000க்கும் மேற்பட்ட ஊழியர்கள் இந்தப் பணியில் ஈடுபடுகின்றனர். மொத்தம் 3 முறை ஒரு வீட்டிற்கு பணியாளர்கள் வருவர்.
மூன்று முறையும் வீட்டில் யாரும் இல்லையென்றால் விண்ணப்ப பாரத்தை வீட்டின் முன் போட்டு விட்டு வருவர். அந்தப் பாரத்தை நிரப்பிசம்பந்தப்பட்ட அலுவலகத்தில் கொடுக்க வேண்டும்.
வீட்டிற்கு வரும் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணியாளர்கள் கேட்கும் கேள்விகளுக்கு சரியான முறையில் பதில் கூறி ஒத்துழைப்புகொடுக்கும்படி தேர்தல் ஆணையம் பொதுமக்களைக் கேட்டுக் கொண்டுள்ளது.
ஜனவரி மாதம் 1 ம் தேதியை தகுதி தேதியாகக் கொண்டு வாக்காளர் பட்டியல் திருத்தம் மேற்கொள்ளப்படுகிறது. அன்றைய தினம் 18வயதை நிறைவு செய்வோர் தங்கள் பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்த்துக் கொள்ளலாம்.
வரைவு வாக்காளர் பட்டியல் ஜனவரி மாதம் 16ம் தேதி வெளியிடப்படும். அதன் பிறகு 31ம் தேதி வரை திருத்தம் மேற்கொள்ளப்படும்.மார்ச் 25 ம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும்.












Click it and Unblock the Notifications