காபூல் மீது ஹெலிகாப்டர் தாக்குதல்

Subscribe to Oneindia Tamil

காபூல்:

ஆப்கானிஸ்தான் தலைநகரமான காபூல் மீது இன்று (திங்கள்கிழமை) அதிகாலை அமெரிக்க ஹெலிகாப்டர்கள்குண்டு வீசித் தாக்குதல் நடத்தின.

சூரியன் உதயமாகும் முன்னரே காபூல் நகரின் வான் பகுதியில் தோன்றிய இந்த ஹெலிகாப்டர்கள் இரண்டுகுண்டுகளை வீசிவிட்டு வேகமாக மறைந்து விட்டன என்று காபூல் நகரவாசிகள் சிலர் தெரிவித்தனர்.

ஹெலிகாப்டர்கள் மறைந்த சிறிது நேரத்திலேயே பறந்து வந்த சில அமெரிக்க விமானங்கள் மேலும் இரண்டுகுண்டுகளை வீசி விட்டுச் சென்றன.

ஆனால், வழக்கம்போல விமான எதிர்ப்பு பீரங்கிகளால் பதிலடி நடத்தும் தலிபான்கள் இம்முறை பதில் தாக்குதல்நடத்தவில்லை என்று கூறப்படுகிறது.

சமீப நாட்களில் காபூல் நகரில் உள்ள தலிபான் படையினர் மீதே தொடர்ந்து அமெரிக்க விமானங்கள் தாக்குதல்நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனாலும் வடக்கு மற்றும் வடகிழக்கு ஆப்கானிஸ்தானிலும் தொடர்ந்து தாக்குதல் நடந்து வருகிறது.

தாக்குதல் முடிய நீண்ட காலமாகும் - அமெரிக்கா

இந்நிலையில் ஆப்கானிஸ்தான் மீதான தாக்குதல் நீண்ட நாட்களுக்குத் தொடரும் என்று அமெரிக்காஅறிவித்துள்ளது.

இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு தீவிரவாதிகளுக்கு எதிராக அமெரிக்கா மேற்கொண்டிருக்கும் மிக முக்கியத்தாக்குதல் இது என்று அமெரிக்காவின் மூத்த ராணுவ அதிகாரி ரிச்சர்டு மியர்ஸ் கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+