எங்கள் ஆட்சியில்தான் அதிக தீவிரவாதிகளைப் பிடித்தோம் - கருணாநிதி
சென்னை:
திமுக ஆட்சிக் காலத்தில்தான் அதிகமான தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டனர் என்றார் திமுக தலைவரும்முன்னாள் முதல்வருமான கருணாநிதி.
இது தொடர்பாக இன்று (திங்கள்கிழமை) அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
எனக்கும் தீவிரவாத அமைப்புகளுக்கும் தொடர்பு இருப்பதாகக் குற்றம் சாட்டியுள்ளார் நிதி அமைச்சர்பொன்னையன். அதே போல திமுக ஆட்சிக் காலத்தில்தான் தீவிரவாதிகள் வளர்க்கப்பட்டனர் என்று முதல்வர்பன்னீர்செல்வமும் பேசியுள்ளார்.
இவர்கள் இருவரும் சொல்வது நூற்றுக்கு நூறு உண்மைக்குப் புறம்பானதாகும்.
தமிழக மீட்சிப் படையினரையும் தமிழக விடுதலைப் படையினரையும் திமுகதான் வளர்த்து விட்டது என்று குற்றம்சாட்டியுள்ளார் பன்னீர்செல்வம்.
உண்மை என்னவென்றால், திமுக ஆட்சிக் காலத்தில்தான் அதிகமான தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டனர்.
இதையெல்லாம் மறந்து விட்டு, திமுகவுக்கு எதிராகக் குற்றம் சாட்டி வருவதையே அதிமுகவினர் கொள்கையாகக்கொண்டுள்ளனர்.
இவற்றையெல்லாம் கண்டு திமுக பயந்துவிடாது. எதையும் சந்திப்பதற்கு நாங்கள் தயாராகவே உள்ளோம் என்றார்கருணாநிதி.












Click it and Unblock the Notifications