திமுக அரசுதான் தீவிரவாதிகளை ஊக்குவித்தது - பன்னீர்
சென்னை:
தீவிரவாதிகளுக்கு முந்தைய திமுக அரசு தந்த ஊக்கத்தின் விளைவாகத்தான் தற்போது தமிழகத்தில் அவர்கள்பல்கிப் பெருகியதற்குக் காரணம் என்று தமிழக முதல்வர் பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
தமிழக விடுதலைப் படையினரிடமிருந்து முன்னாள் முதல்வருக்கு இ-மெயில் மூலம் கொலை மிரட்டல்விடுக்கப்பட்டதையடுத்து, தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர் குலைந்துள்ளது என்று திமுக தலைவர் கருணாநிதி நேற்று(ஞாயிற்றுக்கிழமை) அறிக்கை விடுத்திருந்தார்.
அதற்குப் பதிலளிக்கும் விதமாக நேற்றிரவே பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில்கூறப்பட்டிருப்பதாவது:
தமிழகத்தில் திமுக ஆட்சியில் இருந்தபோதெல்லாம் தீவிரவாதமும் வளர்ந்து வந்திருக்கிறது.
தமிழக மீட்சிப் படையினர், தமிழக விடுதலைப் படையினர் போன்ற பல தீவிரவாத இயக்கங்களைத் திமுகதான் தன்ஆட்சிக் காலத்தில் வளர்த்து விட்டுள்ளது. மேலும் விடுதலைப்புலிகள் சர்வ சுதந்திரமாகத் தமிழகத்தில் நடமாடவும்திமுகதான் காரணமாக இருந்தது.
இதன் விளைவாகத்தான் 1991ல் திமுக ஆட்சி டிஸ்மிஸ் செய்யப்பட்டது.
கடந்த ஆண்டு கன்னட நடிகர் ராஜ்குமார் கடத்தப்பட்டபோதும் கூட திமுகதான் ஆட்சியில் இருந்தது. ராஜ்குமாரைக்கடத்தியவர்கள் தமிழக விடுதலைப் படையினர்தான் என்று கருதப்படுகிறது.
இப்படி திமுக ஆட்சிக் காலத்தில்தான் தீவிரவாத இயக்கங்கள் பல்கிப் பெருகி வளர்ந்துள்ளன.
ஆனால் அதிமுக ஆட்சியிலோ இத்தகைய தீவிரவாத இயக்கங்களைத் தடுப்பதற்கு பெரும் முயற்சிமேற்கொள்ளப்பட்டது. இப்போதும் அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்றுஅவ்வறிக்கையில் கூறியுள்ளார் பன்னீர்செல்வம்.


Click it and Unblock the Notifications
