உடைகிறது விடுதலை சிறுத்தைகள் அமைப்பு

Subscribe to Oneindia Tamil

கடலூர்:

விடுதலை சிறுத்தைகள் அமைப்பு நிர்வாகிகளுக்கிடையே நிலவிய கருத்து வேறுபாடு காரணமாக அந்த அமைப்புஉடைந்து, "புரட்சி விடுதலை சிறுத்தை" என்ற புதிய அமைப்பு வரும் 7ம் தேதி உதயமாகிறது.

விடுதலை சிறுத்தைகள் அமைப்பைக் கட்சியாக மாற்றி தேர்தலில் போட்டியிட வேண்டும் என்ற அவ்வமைப்பின்தலைவர் திருமாவளவன் முடிவுக்கு சில நிர்வாகிகள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

ஆனால் அதையும் மீறி கடந்த 1999 நாடாளுமன்றத் தேர்தலில் சிதம்பரம் தொகுதியில் போட்டியிட்டார். மேலும்சில நிர்வாகிகளும் போட்டியிட்டனர்.

இத்தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு நிர்வாகிகளுக்கிடையே கருத்து வேறுபாடு ஏற்படத் துவங்கியது. நிதியுதவிகளைக்கணக்கு பார்ப்பதிலும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

இதனால் விடுதலை சிறுத்தை அமைப்பு உருவாகக் காரணமாக இருந்த சி.மா. தங்கமணியே கடந்த மார்ச்சில்கட்சியை விட்டு வெளியேறி, "பறையர் பேரவை"யைத் துவக்கினார்.

இதற்கிடையே விடுதலை சிறுத்தை அமைப்பில் ஏராளமான கோஷ்டிகள் உருவாக ஆரம்பித்தன. இவ்வமைப்பின்அரசியல் குழுத் தலைவரான திருவள்ளுவனும் தனி கோஷ்டியமைத்தார்.

திருவள்ளுவனின் ஆதரவாளர்கள் கடந்த உள்ளாட்சித் தேர்தலின்போது, விடுதலைச் சிறுத்தை அமைப்புக்குஎதிராக தேர்தல் வேலை செய்தனர். கட்சிப் பணிகளிலிருந்தும் ஒதுங்க ஆரம்பித்த திருவள்ளுவன், அடுத்தகட்டநடவடிக்கைகள் குறித்து அவ்வப்போது ஆலோசித்து வந்தார்.

இந்நிலையில், வரும் 7ம் தேதி "புரட்சி விடுதலை சிறுத்தை" அமைப்பைத் தொடங்கத் திட்டமிட்டுள்ளார்திருவள்ளுவன். இதற்கான வேலைகள் அனைத்தும் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.

விடுதலை சிறுத்தை அமைப்பை கடலூர் மாவட்டத்தில் வேரூன்றச் செய்தவரே திருவள்ளுவன்தான் என்பதுகுறிப்பிடத்தக்கது. இதையடுத்து விடுதலை சிறுத்தைகள் அமைப்பு மேலும் பல துண்டுகளாகச் சிதறும் அபாயமும்ஏற்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+