இலவச மின்சாரத்தை ரத்து செய்ய வேண்டும் - பாமக
சென்னை:
தற்போது விவசாயிகளுக்கு அளிக்கப்பட்டு வரும் இலவச மின்சார திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்றுபாட்டாளி மக்கள் கட்சி வெளியிட்டுள்ள நிதி நிலை அறிக்கை தமிழக அரசுக்குப் பரிந்துரை செய்துள்ளது.
பெரும்பாலான விவசாயிகள் வெறும் உபரி நிலத்தை வைத்துக் கொண்டு இலவச மின்சாரத் திட்டத்தைத் தவறானவழிகளில் பயன்படுத்தி வருகின்றனர்.
இதனால் 20 பம்ப் செட்டுகளுக்கு மேல் வைத்திருக்கும் விவசாயிகளாவது ஒரு குறிப்பிட்ட தொகையை மின்சாரக்கட்டணமாகச் செலுத்தினால்தான் தமிழக நிதி நிலைமை ஓரளவுக்கு மேம்படும் என்றும் அவ்வறிக்கை கூறுகிறது.
1991 முதல் 2001 வரையிலான 10 நிதி ஆண்டுகளில் 6 நிதி ஆண்டுகளின் நிதி நிலைமையை அக்கு வேறு ஆணிவேறாகப் பிரித்து ஆய்ந்துள்ளது பாமக.
தமிழகத்தில் தற்போது ஏற்பட்டுள்ள நிதித் தட்டுப்பாட்டுக்கு முந்தைய திமுக அரசுதான் காரணம் என்று தமிழகஅரசு கூறி வருவது சரியல்ல என்று அவ்வறிக்கையை வெளிட்டுப் பேசியபோது பாமக நிறுவனர் டாக்டர் எஸ்.ராமதாஸ் கூறினார்.
பொருளாதார வல்லுநர் டாக்டர் எம். ராமதாஸ் என்பவரால் தயாரிக்கப்பட்ட இந்த நிதி நிலை அறிக்கையில்,வருமானப் பற்றாக்குறை அதிகம் ஏற்பட்டுள்ளது என்று கூறப்பட்டுள்ளது. 1991-92ல் 18.8 சதவிகிதமாக இருந்தவருமானப் பற்றாக்குறை 2001-02ல் 15.8 ஆகக் குறைந்துள்ளது என்றும் அந்த அறிக்கை கூறியுள்ளது.
இதனால் நிதித் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக கடந்த திமுக அரசைக் குறை கூறுவது சரியாகாது என்றும்அதிமுகவைச் சாடியுள்ளார் பாமக தலைவர் ராமதாஸ். அதிமுகவின் இந்தக் குற்றச்சாட்டில் எந்தவிதமானஉண்மையும் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
11வது திட்டக் கமிஷனில் கூறப்பட்டவாறு, தமிழகத்திற்கு மத்திய அரசு அதிக நிதி ஒதுக்கீடுசெய்யப்படாததால்தான், தற்போது தமிழகத்தில் நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது என்று இந்த வெள்ளை அறிக்கைதெரிவித்துள்ளது.
வேளாண் துறையை எடுத்துக் கொண்டால், ரூ.68 கோடி மட்டுமே தமிழகத்துக்கு வருமானம் கிடைத்துள்ளது.ஆனால் இந்த வேளாண் துறைக்கு அரசு செய்த செலவோ ரூ.1,522 கோடியாகும் என்றும் இந்த வெள்ளைஅறிக்கை தமிழக அரசைக் குற்றம் சாட்டியுள்ளது.
இந்த நிதி நெருக்கடியை பொருளாதாரச் சீர்திருத்தங்கள் மூலம்தான் சரி செய்ய இயலும் என்றார் பாமக தலைவர்ராமதாஸ்.
பாமக தயாரித்த இந்த அறிக்கை பிற அரசியல் கட்சித் தலைவர்களுக்கும் அனைத்து அமைச்சர்கள் மற்றும் துறைச்செயலாளர்களுக்கும் அனுப்பப்படும் என்றும் இதன் விளைவாக அனைத்துக் கட்சியினரின் விவாதம் ஒன்றும்நடைபெறும் என்றும் ராமதாஸ் கூறினார்.
தமிழக அரசின் நிதி நிலைமை குறித்து ஒரு அரசியல் கட்சி வெளியிட்டுள்ள முதல் நிதி நிலை அறிக்கை இதுதான்என்பது குறிப்பிடத்தக்கது.
அதிலும், அரசு ஊழியர்களுக்குத் தீபாவளி முன் பணம் கூடக் கொடுக்க இயலாத படி பலத்த நிதி நெருக்கடியில்தமிழக அரசு ஊசலாடிக் கொண்டிருக்கும் இவ்வேளையில், பாமக இப்படி ஒரு நிதி நிலை அறிக்கையைவெளியிட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கதுதான்.












Click it and Unblock the Notifications