இலங்கை அகதிகள் முகாம்களில் தீவிர கண்காணிப்பு
சென்னை:
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்குக் இ-மெயில் மூலம் கொலை மிரட்டல் அனுப்பிய கும்பலுக்கும் இலங்கைஅகதிகள் முகாம்களில் உள்ள சிலருக்கும் தொடர்பு இருக்கலாம் என தமிழக ரகசிய போலீசார் சந்தேகிக்கின்றனர்.
இவர்களுக்கும் வீரப்பனுடன் அந்தியூர் காட்டுப் பகுதியில் இருக்கும் தமிழக விடுதலைப் படையினருக்கும் கூடதொடர்பு இருக்கலாம் என்று தெரிகிறது.
கடந்த ஆண்டு கன்னட நடிகர் ராஜ்குமாரைக் கடத்துவற்கு வீரப்பனுக்கு உறுதுணையாக இருந்தவர்கள் தமிழகவிடுதலைப் படையினர். இந்தப் படையைச் சேர்ந்த பலர் வீரப்பனுடன் காட்டுப் பகுதியில் தங்கியுள்ளனர்.
இவர்களின் ஆதரவாளர்கள் மற்றும் கூட்டாளிகளுக்கு இலங்கை அகதிகள் முகாமில் உள்ள சிலருடன் தொடர்புஇருக்கலாம் என்று கருதப்படுகிறது. இவர்கள் உதவியுடன் முகாம்களுக்குள் இந்தக் கும்பல் ஊடுருவியிருக்கலாம்என்று தமிழக ரகசியப் போலீசாருக்குத் தகவல் கிடைத்தது.
இதையடுத்து, அனைத்து முகாம்களிலும் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.
இந்த விடுதலைப் படையினரைத் தேடும் பணியில் தமிழகப் போலீசார் முழு வீச்சில் ஈடுபட்டுள்ளதால், இவர்கள்அந்தியூர் காட்டுப் பகுதிக்குள் ஊடுருவலாம் என்று கருதும் அதிரடிப் படையினர் தீவிரமாகக் கண்காணிப்புப்பணியில் ஈடுபட்டுள்ளனர்.
அந்தியூர், சென்னம்பட்டி, மாதேசுவரன்மலை, கொளத்தூர், பர்கூர், கர்காகண்டி, ஊக்கியம், பங்களாப்புதூர்,மாதேஸ்வரன் கோவில், திம்பம் ஆகிய பகுதிகளில் அதிரடிப் படையினர் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications