ஜெ.க்கு கொலை மிரட்டல்: 2 பேர் பிடிபட்டனர்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
முன்னாள் முதல்வரும் அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதாவுக்கு இ-மெயில் மூலம் கொலை மிரட்டல்விடுத்தது தொடர்பாக இரண்டு பேர் பிடிபட்டுள்ளனர்.
வழக்கு விசாரணைக்காக ஜெயலலிதா நீதிமன்றத்துக்கு வரும்போது அவரைக் கொலை செய்வோம் என்றுஇ-மெயில் மூலம் சில பத்திரிக்கைகளுக்கு தமிழக விடுதலைப் படையினர் மிரட்டல் விடுத்திருந்தனர்.
அந்த விடுதலைப் படையின் சென்னை பிரிவு கமாண்டர் சீலன் என்ற பெயரில் அந்தக் கடிதம் வந்திருந்தது.
இக்கடிதம் எந்தக் கம்ப்யூட்டர் மையத்திலிருந்து வந்தது என்பதை போலீசார் கண்டுபிடித்து, அம்மையத்தைச் சேர்ந்தஇரண்டு பேரைப் பிடித்துள்ளனர்.
தமிழக விடுதலைப் படையினருக்கும் அவர்கள் இருவருக்கும் தொடர்பு உள்ளதா என்பது குறித்து அவர்களிடம்போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications