ராமநாதபுரம், சேலம் மாவட்ட அதிமுக பிரமுகர்கள் நீக்கம் - ஜெ. மீண்டும் அதிரடி

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சேலம் மாவட்ட அதிமுக அவைத்தலைவரும், ராமநாதபுரம் மாவட்டச் செயலாளரும் அப்பதவிகளில் இருந்துநீக்கப்பட்டுள்ளனர் என்று முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

உள்ளாட்சித் தேர்தலின் போது அதிமுக சார்பாக நிறுத்தப்பட்ட வேட்பாளர்களுக்கு எதிராக வேலைசெய்தஅதிமுகவினரின் பட்டியலை ஜெயலலிதா தமது கட்சி நிர்வாகிகளிடம் கேட்டிருந்தார். இதையடுத்து ஒவ்வொருமாவட்டத்திலும் இவ்வாறு உள்வேலை செய்த அதிமுக பிரமுகர்களின் பட்டியல் ஜெயலலிதாவிடம்அளிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து தற்போது அதிமுகவின் சேலம் மாவட்ட அவைத் தலைவரும், ராமநாதபுரம் மாவட்டசெயலாளரும் அப்பதவிகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து சென்னையில் நேற்று (திங்கள்கிழமை)ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

ராமநாதபுரம் மாவட்ட செயலாளர் முனியசாமி, அப்பொறுப்பில் இருந்து நீக்கப்படுகிறார். அந்தப் பொறுப்புக்குசோமத்தூர் சுப்ரமணியன் நியமிக்கப்படுகிறார்.

மேலும் சேலம் புறநகர் மாவட்ட அவைத்தலைவர் எடப்பாடி பழனிசாமி அப்பொறுப்பில் இருந்துவிடுவிக்கப்படுகிறார் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

சேலம் மாட்ட அவைத்தலைவர் பதவிக்கு புதிதாக யாரும் நியமிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே மதுரை, திண்டுக்கல், விருதுநகர், கன்னியாகுமரி, நாமக்கல் மற்றும் கரூர் ஆகிய ஆறு மாவட்டங்களின்அதிமுக செயலாளர்களை கடந்த ஞாயிற்றுக்கிழமை ஜெயலலிதா நீக்கிவிட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+