ஆப்கானிஸ்தானுக்கு புதிய அமெரிக்க தூதர் நியமனம்
வாஷிங்டன்:
ஆப்கானில் தலிபான் ஆட்சியை அகற்றிவிட்டு, புதிய ஆட்சியை ஏற்படுத்துவதில் அங்குள்ள எதிர்ப்படையினருக்கு உதவ ஜேம்ஸ் டாபின்ஸ் என்ற அதிகாரியை அமெரிக்க நியமித்துள்ளது.
ஆப்கானில் தலிபான்கள் ஆட்சியை அகற்றிவிட்டு, அங்கு வாழும் அனைத்து தரப்பு மக்களுக்கும் பலனளிக்கும்வகையில் புதிய ஆட்சி ஏற்படுத்தப்படும். இதற்கு ஆப்கானில் உள்ள தலிபான் எதிர்ப்பு அணியினர் தீவிரமாகஉள்ளனர். அவர்களுக்கு உதவும் வகையில் அமெரிக்க அரசின் சார்பில் ஜேம்ஸ் டாபின்ஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர் ஐக்கிய நாடுகள் சபையின் சார்பாக ஆப்கானின் சிறப்புத் தூதராக நியமிக்கப்பட்டுள்ள லக்தார்ப்ரீட்டரியுடன் இணைந்து செயல்படுவார்.
ஹைத்தி மற்றும் கோசொவோ ஆகிய நாடுகளில் ஏற்பட்ட பிரச்சனைகளைத் தீர்த்து வைத்ததில் டாபின்சுக்கு பெரும்பங்குண்டு.
மேலும் ஆப்கானிஸ்தானின் எதிர்கால திட்டங்களை வகுப்பதில், அமெரிக்க அரசின் அரசியல் ஆலோசகரானரிச்சர்டு ஹாஸ் மற்றும் கிறிஸ்டினா ரோக்கா ஆகியோர் ஈடுபடுவார்கள். இவர்களும் டாபின்சுடன் இணைந்துபணியாற்றுவார்கள்.
தெற்காசியா மற்றும் ஐரோப்பிய நாடுகள் குறித்த அமெரிக்க அரசின் அரசியல் நிலைப்பாட்டை மையமாகக்கொண்டு, ஆப்கானில் புதிய அரசை ஏற்படுத்த டாபின்ஸ் பாடுபடுவார்.
இவ்வாறு பவுச்சர் கூறினார்.












Click it and Unblock the Notifications