தீவிரவாத ஒழிப்பு சட்டத்துக்கு ஜெ. முழு ஆதரவு
சென்னை:
தீவிரவாதத்தை ஒடுக்க மத்திய அரசு கொண்டு வந்துள்ள பொடோ சட்டத்துக்கு முன்னாள் முதல்வரும் அதிமுகபொதுச் செயலாளருமான ஜெயலலிதா ஆதரவு தெரிவித்துள்ளார்.
இந்தச் சட்டத்தை மத்திய பா.ஜ.க. கூட்டணியில் அங்கம் வகிக்கும் திமுக தலைவர் கருணாநிதி எதிர்த்து வருகிறார்என்பது குறிப்பிடத்தக்கது.
சமீபத்தில் இ-மெயில் மூலமான கொலை மிரட்டலுக்கு உள்ளான ஜெயலலிதா இன்று (செவ்வாய்க்கிழமை)வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தீவிரவாதிகளிடமிருந்து நாட்டைப் பாதுகாக்க இது போன்ற கடுமையான சட்டங்கள் தேவை. இந்தச் சட்டத்துக்குமுழு ஆதரவைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இச் சட்டத்துக்கு காங்கிரஸ் தலைமையில் சில எதிர்க் கட்சியினர் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றன. எனவே, இச்சட்டம் குறித்து அனைத்துக் கட்சிகளுடன் மத்திய அரசு ஆலோசனை நடத்தி ஒருமித்த கருத்தை உருவாக்கவேண்டும்.
இந்தியக் குற்றவியல் சட்டமே கூட சில நேரங்களில் தவறாகப் பயன்படுத்தப்படுகிறது. அதற்காக அந்தச்சட்டதையே ரத்து செய்ய வேண்டும் என்று யாரும் கோருவதில்லை.
வன்முறையாளர்கள், பிரிவினைவாதிகளால் நாடு பெரும் சவாலை எதிர்கொண்டுள்ள நேரத்தில் இந்த பொடோசட்டம் முக்கியத்துவம் வாய்ந்தது.
சில நேரங்களில் இந்தச் சட்டம் தவறாகப் பயன்படுத்தப்படலாம். ஆனால், அப்படிப்பட்ட நிலையில்பாதிக்கப்பட்டவர்கள் நீதிமன்றம் மூலம் பரிகாரம் காணலாம்.
இவ்வாறு தனது அறிக்கையில் ஜெயலலிதா கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications