சென்னை மாநகராட்சியில் "கராத்தே" தியாகுவின் ஆதிக்கம்
சென்னை:
துணைமேயர் பதவியைவைத்துக் கொண்டு சென்னை மாநகராட்சியை அதிமுகவைச் சேர்ந்த கராத்தே தியாகராஜன்ஆட்டிப்படைப்பதால், மேயர் ஸ்டாலின் மற்றும் திமுக கவுன்சிலர்கள் டம்மியாக்கப்பட்டுள்ளனர்.
சென்னை மாநகராட்சித் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்ட கவுன்சிலர்களில் 61 பேர் மட்டுமேவெற்றிபெற்றனர். 155 உறுப்பினர்களைக் கொண்ட மாமன்றத்தில் அதிமுக மற்றும் அதன்கூட்டணிக் கட்சிகளுக்கு84 இடங்கள் கிடைத்துள்ளன.
இதனால் துணை மேயர் பதவியை அதிமுக கைப்பற்றியது. கராத்தே தியாகராஜன் துணை மேயராகத்தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இந்நிலையில் கராத்தே தியாகராஜன் தலைமையில் அதிமுகவினர் பலர், சென்னை நகர வாசிகளிடம் குறைகளைக்கேட்டு, உடனடியாக அதிகாரிகளுக்கு குறைகளை நிவர்த்திசெய்ய உத்தரவு பிறப்பிக்கின்றனர்.
இதனால் ஸ்டாலின் தான் மேயரா அல்லது தியாகராஜன் தான் மேயரா என்று கேட்குமளவுக்கு அதிமுகவினரின்ஆதிக்கம் அதிகமாகியுள்ளது.
ஸ்டாலினும் அவையில் அதிகாரிகள் முன்புபோல தமது உத்தரவுகளுக்கு மதிப்பு அளிப்பதில்லை என்பதால், அவைநடவடிக்கைகளில் ஈடுபடுவதைக் குறைத்துக்கொண்டுள்ளார். திமுக கவுன்சிலர்களும் என்ன செய்வது என்றுபுரியாமல் செயலற்றுப் போயுள்ளனர்.
கடந்த முறை ஸ்டாலின் மேயராக இருந்தபோது, மக்கள் குறைகளைத் தீர்ப்பதற்காக "மக்கள் குறைதீர்ப்பு மையம்"துவக்கப்பட்டது. வாரந்தோறும் ஒரு குறிப்பிட்ட நாளில் பொதுமக்களிடம் இருந்து மனுக்களைப் பெற்று, அதற்குநடவடிக்கை எடுப்பார். ஆனால் ஸ்டாலினிடம் தற்போது அந்த வேகம் இல்லை.
அதேநேரத்தில் தியாகராஜன் இதையும் விடவில்லை. இந்தப் பிரிவில் பொதுமக்கள் தரும் மனுக்கள் மீது,அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை எனில் உடனடியாக அதுகுறித்து பொதுமக்கள் தன்னிடம்தெரிவிக்கலாம் என்று அறிவித்துள்ளார்.
இதுபாாேன்ற நடவடிக்கைகளால் சென்னை மேயர் ஸ்டாலின் டம்மியாக்கப்பட்டு வருவது நன்றாகத் தெரிகிறது.












Click it and Unblock the Notifications