மதுரையில் பட்டப்பகலில் வீடு புகுந்து ரூ.10 லட்சம் கொள்ளை

Subscribe to Oneindia Tamil

மதுரை:

மதுரையில் பட்டப்பகலில் வீடு புகுந்த கொள்ளையர்கள் வீட்டிலிருந்த பெண்களை கத்தியால் தாக்கிவிட்டு ரூ.10லட்சம் மதிப்புள்ள பொருட்களைக் அள்ளிச் சென்றனர்.

மதுரை சின்னசொக்கிகுளம் பகுதியில் அரிசி மண்டி உரிமையாளரின் வீடு உள்ளது. இவரது வீட்டில் நேற்றுபட்டப்பகலில் 6 பேர் கொண்ட கொள்ளைக் கும்பல் மாருதி காரில் வந்து இறங்கியது.

வீட்டுக்குள் அதிரடியாக நுழைந்த அந்தக் கும்பல் கத்திகளைக் காட்டி வீட்டிலிருந்த பெண்களை மிரட்டியது.எதிர்த்துப் பேசிய பெண்களை கத்தியால் கிழித்து காயப்படுத்தி, கொலை செய்துவிடுவோம் என்றுமிரட்டியுள்ளனர்.

பின்னர், அவர்களிடமே சாவிகலை வாங்கி பீரோ, பாதுகாப்புப் பெட்டகம் ஆகியவற்றில் இருந்த தங்கம், வெள்ளிநகைகள், மற்றும் பணம் ஆகியவற்றை கொள்ளையடித்தனர். பின்னர் அந்த 6 பேரும் மாருதி காரில் தப்பிச்சென்றனர்.

அவர்கள் கொள்ளையடித்துச் சென்ற பொருள்களின் மொத்த மதிப்பு ரூ.10 லட்சம்.

இதுகுறித்து தல்லாகுளம் காவல்நிலையத்துக்குத் தகவல் கொடுக்கப்பட்டது. உடனே அங்கிருந்து ஒரு போலீஸ் படைவிரைந்து வந்து சம்பவ இடத்தைப் பார்வையிட்டது. பிறகு இந்தக் கொள்ளையில் ஈடுபட்ட கொள்ளையர்களைப்பிடிக்க சப்-இன்ஸ்பெக்டர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு, தேடும்பணி தீவிரமாக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+