பிரபாகரன் இலங்கை அதிபர் ஆவார் - சந்திரிகா அச்சம்
கொழும்பு:
எதிர்க்கட்சி ஆட்சிக்கு வந்தால் அடுத்த 2 ஆண்டுகளில் விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் இலங்கைஅதிபராகி விடுவார் என்று இலங்கை அதிபர் சந்திரிகா குமாரதுங்கா எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அதிபர் மாளிகையில் நடந்த இலங்கை சுதந்திரக் கட்சியின் இளைஞர் அணி மாநாட்டில் சந்திரிகா பேசியதாவது:
விடுதலைப்புலிகளுடன் சேர்ந்து கொண்டு ஐக்கிய தேசிய கட்சியினர் மக்கள் கூட்டணி அரசைப் பதவியிலிருந்துநீக்க சதி செய்தது. ஆனால் அம்முயற்சி பலிக்கவில்லை.
போரின் மூலம் வெற்றி பெற முடியாது என்பதையும் பிரபாகரன் உணர்ந்துள்ளார். ஆனால் இப்பிரச்சனையில் அவர்ஐக்கிய தேசிய கட்சியை இன்னும் ஒரு கருவியாகப் பயன்படுத்தி வருகிறார்.
இதனால், இந்தத் தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சி வெற்றி பெற்றால் அடுத்த 2 ஆண்டுகளில் பிரபாகரன்தான்இலங்கை அதிபராக வருவார் என்று அஞ்சுகிறேன்.
தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி தலைமையிலான தமிழர் கட்சிக் கூட்டணியும் விடுதலைப்புலிகளின்பிரதிநிதியாகத்தான் செயல்படுகிறது. அக்கூட்டணி வெற்றி பெற்றால் விடுதலைப்புலிகளின் பிரதிநிதிகள்நாடாளுமன்றத்திற்கு வருவார்கள் என்றுதானே அர்த்தம்.
எனவே மக்கள் இதை நன்கு உணர்ந்து மக்கள் கூட்டணி வேட்பாளர்களை ஆதரிக்க வேண்டும் என்றார் சந்திரி


Click it and Unblock the Notifications
