ஸ்ரீவில்லிபுத்தூர்: வெள்ளத்தில் சிக்கிய மூதாட்டியை மீட்டார் டி.எஸ்.பி.
Subscribe to Oneindia Tamil
ஸ்ரீவில்லிபுத்தூர்:
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட மூதாட்டி ஒருவரை அந்நகர டி.எஸ்.பியானராஜேந்திரன் நீரில் குதித்து மீட்டு, மருத்துவமனையில் சேர்த்தார்.
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வத்திராயிருப்பு பகுதியில் பலத்த மழை காரணமாக வெள்ளம் கரைபுரண்டு ஓடியது.
65 வயது மூதாட்டி ஒருவர் ஒரு பாலத்தில் நடந்து கொண்டிருந்தபோது மழை வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டார்.
அப்போது அந்த வழியாக வந்த ஸ்ரீவில்லிபுத்தூர் டி.எஸ்.பி. ராஜேந்திரன் இதைப் பார்த்துவிட்டார்.
உடனடியாக அந்தப் பகுதியைச் சேர்ந்த ஐந்து இளைஞர்களுடன் நீரில் குதித்து மூதாட்டியை மீட்டுமருத்துவமனையில் சேர்த்தார்.












Click it and Unblock the Notifications