இலங்கையில் தேர்தல் கலவரம் - 7 பேர் பலி
கொழும்பு:
இலங்கையில் நாடாளுமன்றத் தேர்தல் சூடு பிடித்துள்ள நிலையில், தேர்தல் பிரச்சாரம் தொடர்பாக நடந்த பல்வேறுவன்முறைச் சம்பவங்களில் ஏழு பேர் கொல்லப்பட்டனர்.
இந்த இரண்டு கட்சிகளைச் சேர்ந்த கூட்டணிக் கட்சிகளும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளன. ஆனால் பலஇடங்களில் தேர்தல் பிரச்சாரங்கள் வன்முறைகளாக வெடித்துள்ளன.
இதனால் ஒருவரை மாற்றி ஒருவர் குற்றம் சாட்டிக் கொண்டே இருக்கின்றனர். இதையடுத்து, இலங்கை காவல்நிலையங்களில் குற்றச்சாட்டுப் பதிவுகளின் எண்ணிக்கையும் அதிகமாகிக் கொண்டே செல்கிறது.
அரசு செயலகத்தின் கணக்கை வைத்துப் பார்க்கும் போது, ஐக்கிய தேசியக் கட்சியினர் 150 புகார்களையும், மக்கள்கூட்டணிக் கட்சியினர் 110 புகார்களையும் ஜனதா விமுக்தி பெரமுனா கட்சியினர் 11 புகார்களையும் செய்துள்ளனர்.
அந்த அளவுக்கு தேர்தல் வன்முறைகளும் இலங்கையில் பெருகியிருப்பதையே இந்தப் புகார்கள் கூறுகின்றன.தேர்தல் தொடர்பான இந்த வன்முறைகளில் இதுவரை 7 பேர் இறந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இன்னும் பல இடங்களில் தேர்தல் வன்முறை வெடிக்கலாம் என்று கருதும் இலங்கை அரசு, நாடு முழுவதும் பலத்தபாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளது.
துப்பாக்கிச் சூட்டில் தப்பினார் அமைச்சர்
இந்நிலையில் இலங்கை விளையாட்டுத் துறை அமைச்சரான மங்கள சமரவீரா மீது நடந்த துப்பாக்கிச் சூட்டில், அவர்அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
மாத்தாரா நகரில் அவர் காரில் சென்று கொண்டிருக்கும்போது, அதன் மீது சிலர் துப்பாக்கியால் சுட்டனர்.இச்சம்பவத்தில் சமரவீராவுடன் காரில் இருந்த ஏழு பேருக்கு குண்டுக் காயம் ஏற்பட்டது.
சமரவீரா மட்டும் காயமின்றித் தப்பிவிட்டார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications