புடின்-வாஜ்பாய் இன்று பேச்சுவார்த்தை
மாஸ்கோ:
ரஷ்யா சென்றுள்ள இந்தியப் பிரதமர் வாஜ்பாய், இன்று அந்நாட்டு அதிபர் விளாடிமிர் புடினைச் சந்தித்துப்பேச்சுவார்த்தை நடத்துகிறார்.
இந்த வரவேற்பில் கலந்துகொண்ட ரஷ்ய பாராளுமன்ற சபாநாயகர், கென்னடிஸ் சொலஸ்னோவ், பிரதமர்வாஜ்பாயுடன் இணைந்து நிருபர்களுக்குப் பேட்டியளித்தார்.
அப்போது பிரதமர் வாஜ்பாய் கூறுகையில், ஆப்கானிஸ்தானில் போருக்குப் பிறகு அமையவிருக்கும் ஆட்சியில்,தலிபான்கள் தொடர்புடைய அமைப்பு இடம்பெறுவதை, இந்தியாவும் ரஷ்யாவும் ஏற்காது என்றார்.
இதுகுறித்து, கென்னடிஸ் கூறுகையில், இந்தியா தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்டு, அதை ஒடுக்க உலக நாடுகள்அனைத்தும் ஒன்றுபட வேண்டும் என்று கூறியது. ஆனால் அப்போது, அதை யாரும் பொருட்படுத்தவில்லை.தற்போது, அதே தீவிரவாதம் அமெரிக்காவில் பேரழிவை ஏற்படுத்திய பிறகு, அனைவரும் தீவிரவாதத்தின்கொடுமையை உணர்ந்துள்ளனர். இந்தியா சொன்னது உண்மையாகிவிட்டது என்றார்.
இன்று (செவ்வாய்க்கிழமை) ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினைச் சந்தித்து, வாஜ்பாய் பேச்சுவார்த்தை நடத்துகிறார்.பேச்சுவார்த்தை முடிந்தபின், 3 நாள் பயணமாக நாளை பிரதமர் வாஷிங்டன் புறப்பட்டுச் செல்கிறார்.












Click it and Unblock the Notifications