போக்குவரத்துறை ஊழியர் போனஸ்... பேச்சுவார்த்தை இழுபறி
சென்னை:
தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சருக்கும், தொழிற்சங்க பிரமுகர்களுக்கும் இடையே போனஸ் குறித்து நேற்று(செவ்வாய்க்கிழமை) நடந்த பேச்சுவார்த்தையில் எந்த முடிவும் எட்டப்படாததால் பேச்சுவார்த்தை இன்று(புதன்கிழமை) தொடர்ந்து நடைபெறும் என்று தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் நயினார் நாகேந்திரன்அறிவித்தார்.
தமிழகத்தில் பணிபுரியும் 1 லட்சத்து 15 ஆயிரம் போக்குவரத்து தொழிலாளர்களுக்கு 8.33 சதவிகித போனசும்,11.67 சதவிகித கருணைத் தொகையும் சென்ற ஆண்டு வழங்கப்பட்டது.
இந்த ஆண்டு வழங்கப்படும் போனஸ் தொகை, கருணைத் தொகை குறித்து தமிழக போக்குவரத்துத்துறைஅமைச்சருக்கும், அண்ணா தொழிற் சங்க பேரவை, தொழிலாளர் முன்னேற்ற சங்கம், சி.ஐ.டி.யு. ஆகியவற்றின்பிரமுகர்களுக்கும் இடையே செவ்வாய்க்கிழமை பேச்சுவார்த்தை நடைபெற்றது.
இந்த பேச்சுவார்த்தையில் எந்த உடன்பாடும் எட்டப்படாததால் பேச்சுவார்த்தை புதன்கிழமையும் தொடர்ந்துநடைபெறும் என்று போக்குவரத்துத்துறை அமைச்சர் நயினார் நாகேந்திரன் அறிவித்துள்ளார்.
போக்குவரத்து தொழிலாளர்களுக்கான ஊதிய ஒப்பந்தம் 3 ஆண்டுக்கு ஒரு முறை போடப்படும். 3 ஆண்டுகளுக்குமுன்பு போடப்பட்ட ஊதிய ஒப்பந்தம் இந்த ஆண்டுடன் முடிவடைகிறது.
புதிய ஊதிய ஒப்பந்தத்தை 5 ஆண்டுக்கு ஒரு முறை போடலாம் என்றும். பழைய ஒப்பந்தத்தை மேலும் 2 ஆண்டுகாலத்திற்கு நீடிக்கலாம் என்றும் போக்குவரத்து நிர்வாகத்தினர் கூறினர். இதை ஏற்க தொழிற் சங்கத்தினர்மறுத்துவிட்டனர்.
புதிய ஊதிய ஒப்பந்தம் போடுவது குறித்து அரசு உட-ன-டி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் அரசைவலியுறித்தியுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications